2035ல் மின்துறையில் கரிமக் கழிவை அகற்ற ஜி7 உறுதி

2035ல் மின்துறையில் கரிமக் கழிவை அகற்ற ஜி7 உறுதி

2 mins read

ஜி7 அமைப்­பில் இடம்­பெற்று இருக்­கும் பணக்­கார நாடு­கள் 2035வது ஆண்டு வாக்­கில் மின்­சா­ரத் துறை­யில் இயற்கை எரி பொருள் புழக்­கத்தை அறவே நிறுத்­தி­விட இலக்கு நிர்­ண­யித்துள்ளன.

அந்த நாடு­கள் பெர்­லின் நகரில் மூன்று நாள் பேச்­சு­வார்த்தை நடத்­தின. அதன் முடிவில் பரந்த அள­வி­லான கூட்­ட­றிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

இந்த ஆண்டு முடிவு வாக்­கில் இயற்கை எரி­பொ­ருள் மூலம் கிடைக்­கும் எரி­சக்­திக்­கான அரசு நிதியை நிறுத்­தப்­போ­வ­தாக அந்த நாடு­க­ளின் பரு­வ­நிலை, எரி­சக்தி, சுற்­றுச்­சூ­ழல் துறை அமைச்­சர்­கள் உறுதி கூறி­னர்.

நிலக்­கரி, எரி­வாயு பய­னீடு மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய கரி­மக் கழிவு­க­ளுக்கு முடி­வு­கட்­டு­வ­தில் கவ­னம் திரும்பி இருப்­ப­தாக 'எம்பர்' என்ற பிரிட்­ட­னின் எரி­சக்­தித் துறை அறி­வு­ஜீவி அமைப்­பின் உலக செயல்­திட்­டத் துறைத் தலைவர் டேவ் ஜோன்ஸ் டுவிட்­ட­ரில் தெரி­வித்­தார்.

மின்­சக்­தித் துறை­யில் 2035ஆம் ஆண்­டில் கரி­மக் கழிவு­கள் அறவே இல்­லா­த­படி செய்­வது என்ற இலக்கு உண்­மை­யி­லேயே ஒரு முன்­னேற்­றம் என்று ரோம் நக­ரில் 'ஈகோ' என்ற சுற்­றுச்­சூழல் அறி­வு­ஜீவி அமைப்­பின் இயக்­குநர் லுகா கூறி­னார்.

இந்த இலக்கு நிறை­வேற வேண்­டு­மா­னால் நாடு­கள் நிலக்கரி பய­னீட்டை 2030ஆம் ஆண்­டுக்­குள் படிப்­ப­டி­யாக முற்றி­லும் குறைத்­து­விட வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

ஜெர்­ம­னி­யில் ஜி7 தலை­வர்­கள் வரும் ஜூன் மாதம் சந்­திக்க இருக்­கி­றார்­கள். அப்­போது அவர்கள் இந்த இலக்கை ஏற்றுக்­கொள்­வார்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சாலை­களில் கரி­மக் கழிவு வெளி­யா­வதை 2030ஆம் ஆண்டு வாக்­கில் துடைத்­தொ­ழிக்­க­வும் அமைச்­சர்­கள் உறுதி கூறி­னர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜி7 அமைப்­பில் பிரிட்­டன், கனடா, பிரான்ஸ், ஜெர்­மனி, இத்தாலி, ஜப்­பான், அமெ­ரிக்கா நாடு­கள் இடம்­பெற்றுள்ளன.

உக்­ரேன் போர் கார­ண­மா­கவும் கொவிட்-19க்குப் பிறகுப் பொருளி­யல் மீண்­டும் சூடு­பி­டிக்­கத் தொடங்­கு­வ­தன் விளை­வா­க­வும் உல­க­ள­வில் எரி­சக்தி விநி­யோகம் நெருக்­க­டிக்கு உள்­ளாகி இருக்­கிறது. இந்த நிலை­யில், சுற்­றுச்­சூ­ழ­லுக்குப் பாதிப்பு ஏற்­ப­டாத எரி­சக்­தியைச் சாதிப்­ப­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.