புதுப்பிப்புக்காக மூடப்பட்டு இருந்த சாங்கி விமான நிலைய முனையம்2 நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்கியூ 327 விமானம் ஜெர்மனி மியூனிக் நகரிலிருந்து வந்து காலை 7.12 மணிக்குத் தரையிறங்கியது.
நவீன தானியங்கி குடிநுழைவு அனுமதி முகப்புகள் உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கூடிய முனையம் பயணிகளை வரவேற்றது. பயணிகள் வருகைக் கூடத்தையும் பொதுமக்கள் காத்திருக்கும் பகுதியையும் பிரிக்கும் கண்ணாடிக் கதவு வழி முதல் பயணியாக திரு கௌஷிக் மோகன் வெளியே வந்தார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி பக்கம் 2ல்

