தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளூர் பட்டதாரிகளுக்கு பிரிட்டனில் வேலைவாய்ப்பு

2 mins read
3f514bd9-ba1b-4edc-8335-c7bba90fcab9
பிரிட்டனுக்கு வெளியே செயல்படும் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் படித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டம் பெற்று இருக்கும் பட்டதாரிகளுக்கு புதிய விசா திட்டம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு அளிக்கிறது. படம்: இபிஏ -

உல­கின் தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களைச் சேர்ந்த புதிய பட்­ட­தா­ரி­களை பிரிட்­டிஷ் நிறு­வனங்­கள் வேலை­யில் சேர்த்­துக்­கொள்ள அனு­ம­திக்­கும் வகை யில் ஒரு புதிய விசா திட்­டம் நடப்­புக்கு வந்­தி­ருக்­கிறது.

அதன்­கீழ், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் படித்து அண்­மை­யில் பட்­டம் பெற்ற பட்­ட­தா­ரி­கள் பிரிட்­ட­னில் வேலை தேட­லாம்.

பிரிட்­ட­னின் 'உயர் ஆற்­றல் தனி­ந­பர் விசா' என்ற அந்­தப் புதிய விசா ஏற்­பாட்டை இன்று திங்­கட்­கி­ழமை முதல் பட்­ட­தா­ரி­கள் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம் என்று சிங்­கப்­பூ­ரில் உள்ள பிரிட்­டிஷ் தூத­ர­கம் தெரி­வித்துள்­ளது.

பிரிட்­டனை உல­க­ள­வில் போட்­டித்­தி­றன்­மிக்க நாடாக ஆக்க வேண்­டும் என்று அந்த நாட்­டின் அர­சாங்­கம் இப்­போது பரந்த அள­வி­லான உத்தி ஒன்றை வகுத்து இருக்­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக அந்த விசா திட்­டம் இடம்­பெ­று­கிறது.

பிரிட்­ட­னுக்கு வெளியே தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் படித்து கடந்த ஐந்­தாண்­டு­களுக்குள் பட்­டம் பெற்­றி­ருக்­கும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு இந்­தப் புதிய விசா திட்­டம் வாய்ப்­பு­களை வழங்கு­கிறது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க­மும் பிரிட்­டிஷ் உள்­துறை அமைச்­சின் தலை­சி­றந்த உல­கப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்றுள்ளன.

அமெ­ரிக்­கா­வின் மேசசூ­சட்ஸ் தொழில்­நுட்­பப் பயி­ல­கம், ஹார்­வர்ட், ஸ்டான்­ஃபர்ட், கனடா­வின் டொரோன்டோ பல்­கலைக்­க­ழ­கம், சீனா­வின் பீகிங் பல்­க­லைக்­க­ழ­கம், சின்­குவா பல்­கலைக்­க­ழ­கம், ஜப்­பா­னின் தோக்­கியோ பல்­க­லைக்­க­ழ­கம் உள்­ளிட்ட பல­வும் அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்று இருக்­கின்­றன.

புதிய விசா திட்­டத்­தில் பிரிட்­டிஷ் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் படிக்கும் உலக மாண­வர்­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­த­கைய மாண­வர்­க­ளுக்கு பிரிட்­டன் பட்­ட­தாரி விசா திட்­டத்­தின்கீழ் விசா வழங்­கப்­ப­டு­கிறது. அவர்­கள் பிரிட்­ட­னில் பட்­டப் படிப்பை முடித்­த­தும் தொடர்ந்து குறைந்­த­பட்­சம் ஈராண்டுகள் அங்­கேயே தங்கி வேலை பார்க்­க­லாம்.

உயர் ஆற்­றல் தனி­ந­பர் விசாவை பெறு­வ­தற்குத் தகுதி பெறும் பட்­ட­தா­ரி­கள் உல­கத்­தின் தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இள­நிலை, முது­நிலை அல்­லது பிஎச்டி படித்து இருக்­க­வேண்­டும். அதோடு, ஆங்­கில மொழிப் புலமை தொடர்­பான நிபந்­த­னை­களை­யும் அவர்­கள் நிறை­வேற்ற வேண்­டும். குறைந்­த­பட்­சம் $2,200 பணம் வைத்து இருக்­க­வேண்­டும்.

இந்த விசாவைப் பெறு­வ­தற்கு ஏற்­கெ­னவே வேலை வாய்ப்பை பெற்­றி­ருக்க வேண்­டிய தேவை இல்லை. பிரிட்­ட­னில் தரை­யி­றங்­கிய பின்பு இள­நிலை, முது­நிலை பட்­ட­தா­ரி­க­ளுக்கு இரண்­டாண்டு காலம் விசா வழங்­கப்­படும். அவர்­கள் வேலை தேடிக்­கொள்­ள­லாம்.

பிஎச்டி படித்­த­வர்­க­ளுக்கு மூன்­றாண்டு காலம் விசா வழங்­கப்­படும். இந்த விசாவை பெறு­வோர் எந்தத் துறை­யில் வேண்­டு­மா­னாலும் வேலை தேட­லாம்.

புதிய விசா திட்டம் அனுமதிக்கிறது