மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு; 20 சடலங்கள் மீட்பு

மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு; 20 சடலங்கள் மீட்பு

2 mins read
d4961918-6493-43fd-b037-6fab6beab53c
ஞாயிற்றுக்கிழமை வான்வெளியில் காணாமல்போன நேப்பாள விமானத்தின் சிதைவுகள் மஸ்டாங் என்னும் பகுதியிலுள்ள மலைகளின் மேல் நேற்றுக் காலை காணப்பட்டன. விமானத்திலிருந்து முறிந்த இறக்கை, விமானப் பதிவெண் தாங்கிய பாகம் முதலியன சிதறிக் கிடந்தன. படம்: ஏஎஃப்பி -

வானில் பறந்­து­கொண்­டி­ருந்த வேளை­யில் 22 பேரு­டன் மாய­மான சிறு நேப்­பாள விமா­னத்­தின் சிதைந்த பாகங்­கள் மலைப் பிர­தே­சத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளன. அந்­தப் பகு­தி­யில் சித­றிக் கிடந்த 20 பேரி­டன் உடல்கள் மீட்­கப்­பட்டுள்­ள­தாக நேப்­பாள சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அந்த டுவின் ஒட்­டர் விமா­னம் நேப்­பா­ளத்­தின் டாரா ஏர் என்­னும் விமான நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மா­னது. ஞாயிற்­றுக்­கி­ழமை காலை மேற்கு நேப்­பாள நக­ரான பொக்­கா­ரா­வி­லி­ருந்து ஜோம்­சம் நோக்கி பறக்­கத் தொடங்­கிய விமா­னம் சிறிது நேரத்­தி­லேயே காணா­மல் போனது. அதன் தொடர்பு கிடைக்­க­வில்லை. அத­னைத் தொடர்ந்து தேடி மீட்­கும் பணி உட­ன­டி­யா­கத் தொடங்­கி­யது. மலை­கள் சூழ்ந்த வட்­டா­ரத்­தில் ராணுவ ஹெலி­காப்­டர்­களும் தனி­யார் ஹெலி­காப்­டர்­களும் ஞாயிற்­றுக்­கி­ழமை முழு­வ­தும் தீவி­ர­மா­கத் தேடின.

இருட்­டத் தொடங்­கி­ய­தால் தேடு­தல் பணி நிறுத்­தப்­பட்டு நேற்­றுக் காலை மீண்­டும் தொடங்­கி­யது. அப்­போது மலை­க­ளின் இடையே விமா­னத்­தின் சிதை­வு­களை மீட்­புப் படை­யி­னர் கண்­ட­னர்.

அந்­தப் படங்­களை சமூக ஊட­கங்­கள் வாயி­லாக ராணு­வம் பகிர்ந்து­கொண்­டது. விமா­னத்­தின் இறக்கை, 9N-AET என்­னும் பதி­வெண் தாங்கிய பாகம் உட்­பட சிதைந்த பாகங்­களை அந்­தப் படங்­கள் காட்­டின. விமா­னத்­தில் 4 இந்­தி­யர்­கள், 2 ஜெர்­மா­னி­யர்­கள் உட்­பட 22 பேர் பய­ணம் செய்­த­தில் நேற்று இரவு வரை 20 உடல்­கள் மீட்­கப்­பட்­டன.வானிலை மோச­மாக இருந்­த­போ­தி­லும் தேடு­தல் பணி தொட­ர்வ­தா­க­வும் நேப்­பாள விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் டியோ சந்­திர லால் கார்ன் கூறி­னார்.

நேப்­பா­ளத்­தின் மஸ்­டாங் மாவட்­டத்­தில் உள்ள தசாங் கிரா­மப் பகு­தி­யில் சனோஸ்­வேர் மலை வட்­டா­ரத்­தில் 4,420 மீட்­டர் உய­ரத்­தில் விமா­னம் விபத்­தில் சிக்­கி­ய­தாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. விபத்து எவ்­வாறு நடந்­தது என்­பது பற்றி இன்­னும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.