பொருளியல் சீரழிவால் உருவான அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே புதிய யோசனை
களிலும் அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், போராடி வரும் இளையர்களை அரசாங்க நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இணையு மாறு அழைப்பு விடுக்க இருப்பதாக அவர் நேற்று முன்தினம் தொலைக்காட்சி வாயிலாக ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின்கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
"உத்தேசிக்கப்பட்டு உள்ள இந்த அரசியல் சீர்திருத்தம், அதிபரின் அதிகாரங்களை நாடாளுமன்ற அமைப்புக்கு மாற்றிவிட வழிசெய்கிறது. நாடாளுமன்றக் குழுக்களின் வழிகாட்டுதலோடு ஆட்சி நிர்வாகம் விரிவுபடுத்தப்படும்.
"அந்தக் குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இளையர்களும் நிபுணர்களும் இடம்பெற்று இருப்பார்கள். சீர்திருத்தத்தை நிலைநாட்ட இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவார்கள்.
"நிர்வாகமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இளையர்கள் விரும்புகிறார்கள். நாடு சந்தித்து வரும் பிரச்சினைகளை அவர்கள் அறிவார்கள்.
"எனவே, 15 நாடாளுமன்றக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் நான்கு இளையர்களை நியமிக்க வேண்டும். அந்த நால்வரில் ஒருவர் இளைய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார். எஞ்சிய மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்," என்றார் திரு ரணில் விக்ரமசிங்கே.
இலங்கை அதிபர் மாளிகை முன்பாக 50 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருவோரில் பெரும்பாலோர் இளையர்கள்.
நாட்டைச் சீரழிவுக்கு இட்டுச் சென்றது ராஜபக்சே குடும்பம் என்று குற்றம் சாட்டும் அவர்கள், அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் பதவி துறக்கவேண்டும் என கோரி வருகிறார்கள்.
தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவ மாணவர்கள் பேரணி நடத்தினர். வாரயிறுதி என்பதால் ஏராள மானோர் ஒன்றுதிரண்டு அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களைக் கலைக்க காவல்துறையின் கலகத் தடுப்புப் பிரி
வினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். மேலும் போராட்டக்காரர்கள்மீது நீரைப் பீய்ச்சி அடித்தனர். இவற்றையும் மீறி இரவு வரை நெடுநேரம் போராட்டம் நீடித் தது.
இதற்கிடையே, அதிபர் கோத்த பாய ராஜபக்சேவும் ஆளும் கட்சி யின் நாடாளுமன்றக் குழுவினரும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு திருத்த வரைவு மசோதா அமைச்சரவையில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆலோ
சனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிபரின் நிர்வாக அதிகாரங் களைக் குறைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

