கொவிட்-19 தொற்று தொடங்கியது முதல் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டுள்ளதாக இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 2014ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று, 2019ஆம் ஆண்டின் தேர்
தலில் ஆட்சியைத் தக்கவைத்தது. இந்த அரசாங்கம் பதவி ஏற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 'லோக்கல் சர்க்கிள்' என்னும் ஆய்வு நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தியது.
மோடி அரசாங்கம் மீதான மக்களின் மனநிலையை அறிய நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிட்டத்தட்ட 64,000 பேர் கலந்துகொண்டனர்.
மோடி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து வருவதாக 67 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
2020ஆம் ஆண்டு தொற்று பரவத் தொடங்கியபோது மோடி அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு 62 விழுக்காடாக இருந்து. இரண்டாம் அலை கிருமிப் பரவலின்போது அது 51 விழுக்காட்டுக்கு இறங்கியது.
பணவீக்க அதிகரிப்பு, விலைவாசி ஏற்றம், வேலையில்லாத நிலை போன்றவை தொடர்பான கவலைகள் இருந்தபோதிலும் மோடி அரசாங்கத்தின் செல்வாக்கு உயர்வில் அது பாதிப்பை ஏற்
படுத்தவில்லை என்று ஆய்வு தெரிவித்தது.
கிருமிப் பரவல் 3வது அலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்க மோடியின் அரசாங்கம் தயாராக இருந்தது என்றும் பொருளியலை அது திறம்பட நிர்வகித்தது என்றும் ஆய்வில் பங்கேற்ற பலரும் கூறினர்.
சமூக நல்லிணக்கத்தை மோடி அரசு மேம்படுத்தியதாக 60 விழுக் காட்டினர் கூறினர். இந்தியாவில் தொழில் தொடங்குவதை அரசு எளிதாக்கி இருப்பதாக 50 விழுக் காட்டினர் தெரிவித்தனர்.
எதிர்மறைக் கருத்துகளும் ஆய்வில் பதிவாயின. இந்த ஆண்டு தொடங்கியது முதல் வேலையில்லாதோரின் விகிதம் 7 விழுக்காடாக இருந்து வருகிறது. இதனை மோடி அரசாங்கம் சரிவரக் கண்டு கொள்ளவில்லை என்று 47 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அத்தியாவசியப் பொருள்களின் விலையும் வாழ்க்கைச் செலவினமும் கடந்த மூன்றாண்டுகளாகக் குறையவில்லை என்று ஆக அதிகமாக 73 விழுக்காட்டினர் கூறினர்.
மூன்றாம் முறை ெவன்று ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க விரும்பும் மோடி அரசுக்கு இந்த எதிர்மறைக் கருத்துகள் மிக முக்கியம் என ஆய்வறிக்கை கூறியது.

