புகழ்பெற்ற லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்றார் மருத்துவர் பிரெமிக்கா

மோன­லிசா

உயர்­நி­லைப்­பள்ளி காலத்­தி­லி­ருந்தே அறி­வி­யல் ஆர்­வ­மும் தொண்­டூ­ழிய முனைப்­பும் கொண்­டி­ருக்­கும் பொதுச் சுகா­தார மருத்­து­வர் மா.பிரெ­மிக்கா, 26, வருங்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வ­தை­யும் பொதுச் சுகா­தா­ரத்­தின் முக்­கி­யத்­து­வத்தை இளை­யர்­க­ளி­டம் கொண்டு­செல்­வ­தை­யும் தமது லட்­சி­ய­மாக கொண்­டுள்­ளார்.

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்­த­போது இவ­ருக்குக் கிடைத்த அனு­ப­வங்­கள், பொதுச் சுகா­தா­ரம் மீதுள்ள ஆர்­வத்தை அதி­கப்­ப­டுத்­தி­ய­தோடு உடல் ரீதி­யான சிகிச்­சை­யு­டன் நோயா­ளி­க­ளின் மனப்­போக்கை புரிந்­து­கொண்டு அதற்கு தக்­க­வாறு சிகிச்சை அளிக்­க­வும் கற்­றுக்­கொடுத்­த­தா­கக் கூறி­னார்.

இந்த ஆண்­டின் லீ குவான் இயூ உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற இவர், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொதுச் சுகா­தா­ரத் துறை­யில் ஓராண்­டு­கால முது­நி­லைப் பட்­டக்­கல்­வியை மேற்­கொள்ள இருக்­கி­றார்.

SPH Brightcove Video

“கொவிட்-19 நோய்த்­தொற்­றுக் கால­கட்­டத்­தில் சுகா­தார அமைச்­சில் பணி­பு­ரிந்­த­போது, சிங்­கப்­பூருக்கு தேவை­யான கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்­கையை நிர்­ண­யிப்­ப­தும் பூஸ்­டர் தடுப்­பூ­சி­களின் தேவை­க­ளைக் கணிப்­ப­தும் தடுப்­பூசி மீது நம்­பிக்கை இல்­லா­த­வர்­க­ளி­டம் தடுப்­பூ­சி­யின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­து­வ­தும் சவால்­க­ளாக இருந்­தன,” என்று பிரெ­மிக்கா கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் முதல் 50 கொவிட்-19 நோயா­ளி­களில் ஒரு­வருக்கு சிகிச்சை அளித்த இவர், மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளான நோயா­ளி­க­ளுக்கு உடல் மற்­றும் மன ரீதி­யான சிகிச்சை அளித்­தது மிகுந்த சவா­லாக இருந்­ததாகக் கூறினார். கொவிட்-19 திரி­பு­க­ளான டெல்டா, ஓமிக்­ரான் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான உரிய சிகிச்­சை­முறை மாற்­றங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு நோயா­ளி­களை அணு­கு­வது கடி­ன­மாக இருந்­த­தா­க­வும் இவர் சொன்­னார்.

“கட­லில் வேலை செய்­யும் ஏறத்­தாழ 36,000 ஊழி­யர்­க­ளுக்கு ‘சீ வேக்ஸ்’ திட்­டத்­தின் மூலம் தடுப்­பூ­சி­க­ளைக் கொண்­டு­செல்­லும் திட்டக்­கு­ழு­வில் பல பங்காளிக­ளு­டன் இணைந்து பணி­பு­ரிந்த அனு­பவம், பரந்த கண்­ணோட்­டத்­தில் சிகிச்சை அளிக்கக் கற்­றுக்­கொள்ள உத­வி­யது.

“மேலும், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் வெகு­நாள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தமிழ் ஊழி­யர்­க­ளி­டம் தமி­ழில் பேசி சிகிச்சை அளித்­தது மறக்­க­மு­டி­யாத அனு­பவம். ஒரு மருத்­து­வ­ராக நோயா­ளி­க­ளின் நம்­பிக்­கையை பெறு­வ­தன் அவ­சி­யத்தை அப்­போது நான் உணர்ந்­தேன்,” என்று பிரெ­மிக்கா நினை­வு­கூர்ந்­தார்.

வீட்­டி­லி­ருந்து குண­ம­டை­யும் திட்­டத்­தின்­கீழ், 200க்கும் மேற்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு இணை­யம்­வழி இவர் மருத்­துவ ஆலோ­சனை வழங்­கி­னார்.

தமிழ்­மொழி மீது அதீத ஆர்­வம் கொண்­டுள்ள இவர், மருத்­து­வக் கல்­வியை மேற்­கொள்­வ­தற்கு முன்பு தமிழ் முர­சில் மாண­வ செய்­தி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றி­யி­ருந்­தார். தேசிய நூலக வாரி­யத்­தின் இளம் எழுத்­தா­ளர்­கள் வட்­டத்­தின் செய­ல­வைக்­குழு உறுப்­பி­ன­ரா­க­வும் கல்வி அமைச்சு தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு உறுப்­பி­ன­ரா­க­வும் செய­லாற்றி வரு­கி­றார்.

சிங்­கப்­பூர் சுகா­தா­ரத் துறை­யின் பங்­கு­தா­ரர்­க­ளான அர­சாங்­கம், சுகா­தார நிறு­வ­னங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், மருத்­துவ ஊழி­யர்­கள், பொது­மக்­கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைக்­கும் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வது தனது கனவு என்று சொன்ன இவர், இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் உள்ள நாட்பட்ட நோய்­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் புது நோய்­கள் ஏற்­படு­வதற்­கான வாய்ப்­பு­க­ளை­யும் குறைக்க முடி­யும் என்று கூறி­னார்.

மருத்­து­வ­ரான டாக்­டர் ஹைரில் ரிஸால் அப்­துல்­லா­வும் சுகா­தார அமைச்­சில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிதிக் குழு­வின் துணை இயக்­கு­நரான திரு மெத்­தியூ லீயும் இந்த ஆண்­டின் லீ குவான் இயூ உப­காரச் சம்­ப­ளத்தை பெற்­றுள்­ள­னர்.

நவீன சிங்­கப்­பூ­ரின் சிற்­பி­யான அம­ரர் லீ குவான் இயூ­வின் பங்­க­ளிப்­பு­க­ளைப் போற்­றும் வித­மாக, தலை­சி­றந்த சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­களின் மேற்­ப­டிப்பை மேற்­கொள்ள 1991ஆம் ஆண்டு தஞ்­சோங் பகார் குடி­மக்­கள் ஆலோ­சனை மன்­றம் இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்தை நிறு­வி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!