தற்காப்புக் கூட்டமைப்பு நவீன சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்ய கடப்பாடு

தற்காப்புக் கூட்டமைப்பு நவீன சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்ய கடப்பாடு

1 mins read
752644f7-d0d6-491d-91f9-b9ada0898cd8
'எஃப்பிடிஏ' கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (இடமிருந்து மூன்றாவது) நேற்று சந்தித்துப் பேசினார். படம்: சாவ்பாவ் -

சிக்­க­லான பாது­காப்­புச் சவால்­களுக்கு மத்­தி­யில், ஐந்து நாட்டு தற்­காப்பு உடன்­பாட்­டுக் கூட்­ட­மைப்பு (எஃப்பி­டிஏ) நவீன சூழ­லுக்குப் பொருத்­த­மாக இருப்­பதை உறு­தி­செய்ய தாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்ளதாக கூட்­ட­மைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடு­கள் கூறி­யுள்­ளன.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் ஆயு­த­மேந்­திய பூச­லுக்கு மத்­தி­யில் 1971ல் அமைக்­கப்­பட்ட எஃப்பி­டி­ஏ­வில் சிங்­கப்­பூர், மலே­சியா, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து, பிரிட்­டன் ஆகிய நாடு­கள் இடம்­பெ­று­கின்­றன. சிங்­கப்­பூ­ரிலோ மலே­சி­யா­விலோ ஆயு­த­மேந்­திய தாக்­கு­தல் இடம்­பெற்­றால், இந்­தக் கூட்­ட­மைப்­பின்­கீழ் உறுப்பு நாடு­கள் ஒன்று மற்றொன்­று­டன் கலந்­தா­லோ­சிக்க வேண்­டும்.

கடந்த ஆண்டு எஃப்பி­டிஏ அதன் 50வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டி­யது. வட அட்­லாண்­டிக் ஒப்­பந்த அமைப்­புக்கு (நேட்டோ) அடுத்­த­தாக, உல­கின் இரண்­டாவது பழ­மை­வாய்ந்த தற்­காப்­புக் கூட்­ட­மைப்­பாக எஃப்பி­டிஏ திகழ்­கிறது.

ஷங்­ரிலா மாநாட்­டிற்கு மத்­தி­யில், எஃப்பி­டிஏ உறுப்பு நாடு­க­ளின் பிர­மு­கர்­களை சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று சந்­தித்­துப் பேசி­னார்.

"எஃப்பி­டிஏ நவீன சூழ­லுக்கு பொருத்­த­மாக இருக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை நாங்­கள் அறி­கி­றோம். அவ்­வாறு செய்ய நாங்­கள் கடப்­பாடு கொண்­டி­ருக்­கி­றோம்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார் ஆஸ்­தி­ரே­லி­யத் துணைப் பிர­த­ம­ரும் தற்­காப்பு அமைச்­ச­ரு­மான ரிச்­சர்ட் மார்ல்ஸ்.