ரஷ்யப் படையெடுப்பை நிறுத்துவது ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியம்

ரஷ்யப் படையெடுப்பை நிறுத்துவது ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியம்

2 mins read
7ede2c7d-7578-4525-a4ff-1e210a9c856b
ஷங்ரிலா கலந்துரையாடலில் காணொளி வழியாக கலந்துகொண்டு நேற்று பிரமுகர்களிடம் உரையாற்றினார் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஷங்ரிலா மாநாட்டில் உக்ரேனிய அதிபர் வலியுறுத்து

உக்­ரேன் மீது ரஷ்யா தொடுத்­து­ வ­ரும் போர், உக்­ரேனை மட்­டும்­ அல்லா­மல் அனைத்­து­ல­கச் சட்­டத்­தின் எதிர்­கா­லத்­தை­யும் பாதித்­துள்­ள­தாக உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி கூறி­யுள்­ளார்.

உக்­ரே­னி­யத் தலை­ந­கர் கியவ்­வில் பெயர் குறிப்­பி­டப்­ப­டாத இடத்­தி­லி­ருந்து பேசிய அவர், ஆசி­யா­வின் முதன்மை பாது­காப்பு உச்­ச­நிலை மாநா­டான ஷங்­ரிலா கலந்து­ரை­யா­ட­லில் காணொளி வழி­யாக கலந்­து­கொண்டு நேற்று பிர­மு­கர்­களி­டம் உரை­யாற்­றி­னார்.

மேற்­கத்­திய, ஆசிய நாடு­க­ளி­ட­மி­ருந்து உக்­ரே­னுக்கு கிடைத்­துள்ள ஆத­ர­வைப் பற்­றிப் பேசிய அவர், உதவி வழங்­கு­வதை நாடு­கள் நிறுத்தி­வி­டா­மல் இருப்­பது முக்­கி­யம் என வலி­யு­றுத்­தி­னார்.

"உங்­க­ளது ஆத­ர­வுக்கு நான் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ளேன். ஆனா­லும், இந்த ஆத­ரவு உக்­ரே­னுக்கு மட்­டு­மல்ல, உங்­க­ளுக்­கும்­கூட," என்று அவர் சொன்­னார்.

கருங்­க­டல், அஸோவ் கட­லில் உள்ள துறை­மு­கங்­களை ரஷ்­யப் படை­கள் முற்­று­கை­யிட்­டுள்­ள­தால், உக்­ரே­னால் உலக நாடு­க­ளுக்கு உணவு ஏற்­று­ம­தி­களை செய்ய முடி­ய­வில்லை என்று திரு ஸெலென்ஸ்கி சொன்­னார். இது, உக்­ரே­னுக்கு மட்­டு­மல்ல, உல­கம் முழு­வ­துக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

"எங்­க­ளால் உண­வுப் பொருள்­களை ஏற்­று­மதி செய்ய முடி­ய­வில்லை என்­றால், பல ஆசிய, ஆப்­பி­ரிக்க நாடு­களில் கடு­மை­யான உணவு நெருக்­க­டி­யும் பஞ்­ச­மும் எற்­படும்," என அவர் எச்­ச­ரித்­தார்.

நாற்­பது நாடு­க­ளைச் சேர்ந்த 575 பிர­மு­கர்­க­ளி­டம் பேசிய திரு ஸெலென்ஸ்கி, ரஷ்ய எல்­லைக்­குள் நுழைய தம் ராணு­வத்­துக்கு எண்ணம் எது­வு­மில்லை என்­றார்.

"எங்­க­ளது மண்­ணில் போர் தொடுக்­கப்­ப­டு­கிறது என்­பதை நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். உக்­ரே­னில் மக்­கள் மடி­கின்­ற­னர். ரஷ்ய மண்­ணுக்­குச் செல்ல நாங்­கள் விரும்­ப­வில்லை," என்று அவர் கூறி­னார்.

அனைத்­து­ல­கச் சட்­டத்­தைச் சீர்­கு­லைக்க முயற்சி செய்­வ­தாக ரஷ்­யாவை விமர்­சித்த திரு ஸெலென்ஸ்கி, சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­ம­ரான அம­ரர் லீ குவான் இயூ கூறி­யி­ருந்த வார்த்­தை­க­ளை­யும் தமது உரை­யில் மேற்­கோள் காட்­டி­னார்.

"நீங்­கள் நன்­க­றிந்த ஒரு­வர் கூறி­யி­ருந்த வார்த்­தை­களை உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த நான் விரும்­பு­கி­றேன். அனைத்­து­ல­கச் சட்­டம் இல்­லை­யெ­னில், பெரிய மீன் சிறிய மீனை விழுங்கிவிடும். சிறிய மீன், இறால்­க­ளை விழுங்கிவிடும். நாம் இல்­லா­மல் போயி­ருப்­போம்.

"இவை, திரு லீ குவான் இயூ­வின் அனு­பவ அறி­வு­டைய சொற்­களா­கும். பல விஷ­யங்­க­ளுக்­கான தெளி­வான கார­ணங்­களை நன்­கு அறிந்த தலை­வ­ரான அவர், எதற்கு என்ன மதிப்பு உள்­ளது என்­பதை நன்­றாக அறிந்­தி­ருந்­தார்," என்­றார் திரு ஸெலென்ஸ்கி.