15 கிலோ எடையைக் குறைத்து ரூ.15,000 கோடி கேட்கும் எம்பி

15 கிலோ எடையைக் குறைத்து ரூ.15,000 கோடி கேட்கும் எம்பி

2 mins read
337d6e49-6f01-4ecf-af09-854098b3620f
ஒரு கிலோ எடையைக் குறைத்தால் தன் தொகுதிக்கு ரூ.1,000 கோடி கிடைக்கும் என்பதால் நான்கு மாதங்களில் 15 கிலோ எடை யைக் குறைத்த பாஜக எம்பி ஃபிரோஜியா. படம்: இந்திய ஊடகம் -

இந்­தி­யா­வின் மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தின் உஜ்­ஜ­யினி தொகுதி பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அனில் ஃபிரோஜியா, தான் 15 கிலோ உடல் எடையைக் குறைந்து விட்டதாக­வும் உறுதி கூறி­ய­தைப் போல் மத்­திய அமைச்­சர் 15,000 கோடி ரூபாய் பணத்­தைக் கொடுக்க வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இந்­திய சாலை, போக்­கு­வ­ரத்து நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சர் நிதின் கட்­காரி கடந்த பிப்­ர­வரி மாதம் உஜ்­ஜ­யினி நக­ரில் பொது நிகழ்ச்சி ஒன்­றில் கலந்துகொண்­டார். அந்த நிகழ்ச்­சி­யில் உஜ்­ஜ­யினி தொகுதி பாஜக எம்பி ஃபிரோஜியா முன்­னி­லை­யில் கட்­காரி பேசி­னார்.

"முதன்­மு­த­லாக எம்பி ஆகி இருக்­கும் ஃபிரோஜியா 135 கிலோ வுக்­கும் அதிக உடல் எடை­யு­டன் இருக்­கி­றார்.

"இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி 'உட­லு­றுதி இந்­தியா' என்ற ஒரு திட்­டத்தைத் தொடங்கி இருக்­கி­றார். அதை கருத்­தில் கொண்டு ஃபிரோஜியா தன் உடல் எடை­யைக் குறைக்க வேண்­டும்.

"அப்­படி குறைக்­கும் ஒவ்­வொரு கிலோ­வுக்­கும் அவ­ரின் தொகுதி மேம்­பாட்­டுக்காக ரூ.1,000 கோடி கொடுக்­கப்படும்," என்று அந்த நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர் கட்காரி சவால் விடுத்­தார்.

"அந்­தச் சவாலை ஏற்­றுக் கொண்­டேன். நாள்­தோ­றும் காலை­யில் 5 மணிக்கு எழுந்­தேன். நடை, ஓட்­டம் என்று பயிற்சி செய்­தேன். யோகா செய்­தேன். மன நல­னைப் பேணி­னேன்.

"உண­வைக் குறைத்து உடல் நல­னுக்கு ஏற்ற உணவை சாப்­பிட தொடங்­கி­னேன். உறு­தி­யு­டன் செயல்­பட்­டேன். நான்கு மாதங்­களில் 15 கிலோ எடையைக் குறைத்து­விட்­டேன்.

"ஆகை­யால் அமைச்­சர் உறுதி கூறி­ய­தைப் போல் என் தொகுதிக்கு ரூபாய் 15,000 கோடி தொகையை ஒதுக்­க­வேண்­டும்.

"இதோடு நிற்­கப்போவ­தில்லை. தொடர்ந்து உடல் எடை­யைக் குறைத்து அதன்மூலம் கிடைக்கும் பணத்­தைக் கொண்டு என் தொகு­தியை மேம்­படுத்­தப்போகி­றேன்.

"பிரதமரின் உடலுறுதித் திட்டத்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை," என்று எம்பி ஃபிரோஜியா தெரி­வித்­தார்.