சிங்கப்பூரில் உள்ள மூத்தோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை 2025ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரிக்க சுகாதார அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. இதன்படி இன்னும் மூன்று ஆண்டு
களுக்குள் 220 மூத்தோர்
பராமரிப்பு நிலையங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, அடுத்த பத்து ஆண்டுகளில் தாதிமை இல்லங்களில் உள்ள படுக்கை
களின் எண்ணிக்கையை இரு
மடங்கு அதிகரிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. 31,000க்கும் அதிகமான படுக்கைகளை வழங்கும் நோக்கில் அமைச்சு செயல்பட்டு வருகிறது.
2010ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தாதிமை இல்லங்களில் உள்ள படுக்கை
களின் எண்ணிக்கை 9,600லிருந்து 16,200க்கு உயர்ந்திருக்கிறது. படுக்கைகளின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு 70 விழுக்காடு உயர்த்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
ஒருங்கிணைக்கப்பட்ட
பராமரிப்பு அமைப்பின் வருடாந்திர சமூகப் பராமரிப்புப் பணித் திட்ட கருத்தரங்கில் அவர் நேற்று
கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சி பான் பசிபிக் ஹோட்டலில் நடைபெற்றது.
மூத்தோர் பரிமரிப்புச் சேவைகளை ஒருங்கிணைக்க இந்த அமைப்பு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் பலர் மூப்படைந்து வருவதாகவும் கூடிய விரைவில் பலருக்கு மூத்தோர் பராமரிப்பு நிலையங்களின் சேவை தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூப்படைவோர், நோய்வாய்ப்
படுவோர் எண்ணிக்கை அதி
கரிக்கக்கூடும் என்பதால் மருத்து வமனைகள், தாதிமை இல்லங்கள் ஆகியவற்றுக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்க கூடுதல் மூத்தோர் பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படுகின்றன.
அத்துடன், சமூகப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி
சிங்கப்பூரில் 119 மூத்தோர்
பராமரிப்பு நிலையங்கள் உள்ளன.
துடிப்புடன் மூப்படைவதற்கான திட்டங்களை இந்த நிலையங்கள் வழங்குகின்றன. பராமரிப்புச் சேவைகள் பற்றிய தகவல்களையும் பரிந்துரைகளையும் பெற மூத்தோர் இந்நிலையங்களை நாடலாம்.
மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் வழங்கும் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று திரு ஓங் கூறினார்.
நாளடைவில், ஒவ்வொரு நிலையமும் 1,000லிருந்து 4,000 மூத்தோருக்குப் பொறுப்பேற்கும்.
மேலும், மூத்தோரின் சுகாதாரம் மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடித்தள அமைப்பு கள், தனியார் மருந்தகங்கள் போன்ற சமூகக் கட்டமைப்பு
களுடன் மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் ஒன்றிணைந்து செயல்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மூத்தோர் சில மாதங்
களுக்கு ஒருமுறை தனியார் மருத்துவர்கள் அல்லது பலதுறை மருந்தகங்களிலிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சைகளுக்கு இடையே இவர்கள் மூத்தோர் பராமரிப்பு நிலையங்களுக்குச் சென்று சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அல்லது துடிப்புடன் மூப்படைவதற்காக நடத்தப்படும் திட்டங்களில் சேரலாம்.
மூத்தோரின் உடல்நிலையைக் கண்காணிக்கவும் மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் உதவ வேண்டும் என்று சுகாதார அமைச்சு விரும்புவதாக
அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
தரமிக்க அந்திமகாலச் சேவைகளையும் விரிவுபடுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளதாக திரு ஓங் கூறினார்.
"கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனைகளுக்கும் இல்லங்களுக்கும் இடையிலான புதிய பராமரிப்பு நிலையங்களை நாங்கள் சோதனை செய்து ஒருங்
கிணைத்துள்ளோம்.
"அந்திமகாலப் பராமரிப்புச் சேவைகள் சமூக அடிப்படையில் வேரூன்றி இருக்க கூடுதல் நட
வடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று திரு ஓங் தெரிவித்தார்.

