ஊழியர் பற்றாக்குறை காரணத்தினால் மலேசியாவின் செம்பனை தோட்டங்களிலிருந்து பகுதிமின்
கடத்தி நிறுவனங்கள் வரை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்பிலான விற்பனை வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை ஏற்க முடியாமல் அவை தவித்து வருகின்றன. இதனால் கொவிட்-19 நெருக்கடிநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலேசியப் பொருளியலின் மீட்சி தடைபட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த விதிக்கப்பட்டிருந்த தடையை மலேசியா கடந்த பிப்ரவரி மாதம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்கள் மலேசயாவில் வேலை செய்ய ஒப்புதல் வழங்கும் அரசுப் பணிகள் மிகவும் மெதுவாக நடப்பதால் எதிர்பார்த்த அளவில் நிறு
வனங்களுக்கு ஆள்பலம் கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாது, ஊழியர் பாதுகாப்பு குறித்து இந்தோனீசியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாலும் ஊழியர் பற்றாக்குறை நீடிப்பதாக தொழில்துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அரசதந்திரிகளும் குறைகூறுகின்றனர்.
ஏற்றுமதியை அதிகம் நம்பி
இருக்கும் மலேசியா, ஆலைகளில் பணிபுரிய வெளிநாட்டு ஊழியர்
களையே சார்ந்திருக்கிறது. அசுத்தமான, அபாயகரமான, சிரமமிக்க பணிகள் என மலேசியர்கள் வெறுத்து ஒதுக்கும் பணிகளைச் செய்ய வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க அனைத்து நாடுகளும் முயன்றுவரும் நிலையில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக மலேசிய நிறுவனங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை நீடித்தால் மற்ற நாடு
களிடம் தங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்று மலேசியாவின் உற்பத்தித் துறை அச்சம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறை, தோட்டத் தொழில், கட்டுமானப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்ற மலேசியாவுக்கு மேலும் குறைந்தது 1.2 மில்லியன் ஊழியர்கள் தேவைப்
படுகின்றனர்.
கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டன் பயிர் பாழாகிவிடும் நிலை இருப்பதாக மலேசியாவின் பொருளியலுக்கு ஐந்து விழுக்காடு பங்
களிக்கும் செம்பனைத் துறை எச்
சரிக்கை ஒலி எழுப்பியுள்ளது. அவ்வாறு நேர்ந்தால் $5.6 பில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்
படக்கூடும்.
தேவையான ஊழியர்கள் உடனடியாகக் கிடைக்காவிடில் தோராயமாக $700 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் என்று
மலேசியாவின் ரப்பர் கையுறைத் துறை கவலை தெரிவித்துள்ளது.
475,000 வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்று மலேசிய நிறு
வனங்கள் தெரிவித்திருந்ததாகவும் ஆனால் மலேசியாவில் வேலை செய்ய வெறும் 2,065 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம். சரவணன் தெரிவித்திருந்தார். போதிய தகவல் அளிக்காததாலும் விதி
முறைக்கு உட்படாததாலும் பலரது விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
போதிய ஊழியர்கள் இல்லாமல் திண்டாடும் ஜோகூர் ஹோட்டல்கள்
இதற்கிடையே, மிகக் கடுமையான ஊழியர் பற்றாக்குறையால் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களும் கடைகளும் திண்டாடுகின்றன.
சிங்கப்பூரில் கூடுதல் சம்பளம் கிடைப்பதாலும் நாணய மாற்று விகிதத்தைக் கருத்தில் கொண்டும் அம்மாநிலத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூரில் பணியாற்ற விரும்புகின்றனர். எனவே, ஜோகூரில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்க தயாராக உள்ள
போதிலும் அங்குள்ள பலருக்கு அதில் நாட்டம் இல்லை.
"தற்போது இருக்கும் ஊழியர்களை வைத்து எங்களால் சமாளிக்க முடிகிறது. வெவ்வேறு பிரிவு களில் பணியாற்றத் தேவையான திறன்களை எங்கள் ஊழியர்கள் கொண்டிருப்பதால் எங்களால் இயங்க முடிகிறது. புதிய ஊழியர்களை வேலையில் அமர்த்துவதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம்.
"ஊழியர்களுக்காக நாங்கள் சிங்கப்பூர் நிறுவனங்களுடன்
போட்டிபோட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
"நாணய மாற்று விகிதம் காரணமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது," என்று ஜோகூரின் ஸ்கூடாய் நகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றின் தலைமை நிர்வாகி திரு சனி சூ தெரிவித்தார்.
ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள சவால்மிக்க நிலை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் திரு ஐவன் டியோ தெரிவித்தார்.
ரிங்கிட்டின் மதிப்பு பலவீனம் அடைந்து வருவதாலும் ஊழியர்களை ஈர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

