ராகுல் காந்தியிடம் விசாரணை; காங்கிரஸ் கொந்தளிப்பு

ராகுல் காந்தியிடம் விசாரணை; காங்கிரஸ் கொந்தளிப்பு

2 mins read
0839bbb2-b5ab-4e9e-9658-d6c94356373d
தமது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுடன் பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறைக்குச் சென்ற ராகுல் காந்தி (நடுவில்). கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் அவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது. வழக்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.படம்: இபிஏ -

நேஷ­னல் ஹெரால்டு நாளி­

த­ழின் பதிப்பு நிறு­வ­ன­மான அசோ­சி­யேட்­டட் ஜர்­னல்ஸ் நிறு­வ­னத்­தின் ரூ.2,000 கோடி சொத்­துக்­களை சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்­கு­நர்­க­ளாக உள்ள யங் இந்­தியா நிறு­வ­னத்­திற்கு மாற்­றப்­பட்­ட­தில் முறை­கேடு நடை­பெற்­ற­தாக கூறி பாஜக மூத்த தலை­வர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி வழக்கு தொடுத்தார்.

இதுதொடர்­பாக சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்­றம் குறித்து அம­லாக்­கத்­துறை வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கிறது. நேஷ­னல் ஹெரால்டு வழக்­கில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகி­யோர் அம­லாக்­கத்­துறையில் முன்னிலை யாக வேண்டும் என உத்­த­ர­

வி­டப்பட்டது. அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டதை அடுத்து, அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கத்­திற்கு ராகுல்­ காந்தி அவ­ரது சகோ­

த­ரி­யும் காங்­கி­ரஸ் பொதுச்­

செ­ய­லா­ள­ரு­மான பிரி­யங்கா காந்தி வத்­ரா­வு­டன் நேற்று சென்­றார். அதற்கு முன்­ன­தாக ராகுல் காந்­திக்கு ஆத­ர­வா­க­வும் பாஜக அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­க­வும் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர். அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ள் கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

அத்­து­டன் அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கம் முன் ராகுல் காந்தி சிறிது தூரம் நூற்­றுக்­க­ணக்­கான காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளு­டன் இணைந்து சத்­தி­யா­கி­ரக பாத­யாத்­திரை மேற்­கொண்­டார். ராகுல் காந்­தி­யு­டன் அக்­கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் கேசி வேணு­கோ­பால், செய்­தித் தொடர்­பா­ளர் ரன்­தீப் சுர்­ஜே­வாலா உள்­ளிட்ட முன்­னணி தலை­வர்­கள் பாத­யாத்­தி­ரை­யில் ஈடு­பட்­ட­னர். அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கம் முன் போராட்­டம் நடத்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

பாஜக அர­சின் கைப்­பா­வை­யாக அம­லாக்­கத்­துறை செயல்­ப­டு­வ­தாக கூறி நாடு முழு­வ­தும் காங்­கி­ரஸ் தொண்­டர்­கள் முக்­கிய இடங்­களில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.