கொவிட்-19 பாதிப்பு திடீர் அதிகரிப்பு; பரிசோதனை, தனிமைப்படுத்துதலில் பெய்ஜிங் தீவிரம்

கொவிட்-19 பாதிப்பு திடீர் அதிகரிப்பு; பரிசோதனை, தனிமைப்படுத்துதலில் பெய்ஜிங் தீவிரம்

1 mins read
cb967c6f-8b5d-4e1c-ae19-60025574fbe3
கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெய்ஜிங் மக்கள். படம்: ஏஎஃப்பி -

சீனத் தலை­ந­கர் பெய்­ஜிங்­கில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து வரு­வ­தால் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்கும்

நட­வ­டிக்­கை­களில் அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ள­னர்.

அதி­க­மா­னோரை ஈர்க்­கக்­கூ­டிய 24 மணி நேர மது­பா­னக்­கூ­டத்­தி­ல் கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது. சிறிது நேரத்­தி­லேயே கிட்­டத்­தட்ட 200 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டு­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அந்த மது­பா­னக்கூடத்­திற்­குச் சென்­ற­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த ஏறத்­தாழ 10,000 பேரை அதி­கா­ரி­கள் அடை­யா­ளம் கண்­டு­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் வசிக்­கும் குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­க­ளி­லி­ருந்து யாரும் வெளியே வர முடி­யாது என்­றும் அவற்­றுக்­குள் உள்ளே செல்ல முடி­யாது என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை சீனா கடந்த வாரம் தளர்த்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது. கொவிட்-19 அறவே இல்­லாத நிலையை எட்ட இலக்கு கொண்­டுள்ள சீனா­வுக்கு கிரு­மிப் பர­வல் மீண்­டும் தலை­தூக்­கி­

யி­ருப்­பது பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நிலைமை மோச­மா­கா­மல் இருக்க பெய்­ஜிங்­கைச் சேர்ந்த மில்­லி­யன் கணக்­கான மக்­க­ளுக்கு கொவிட்-19

பரி­சோ­தனை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர்

தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

மீண்­டும் பெரிய அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தால் அதி­கா­ரி­க­ளுக்கு

நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, ஷாங்­காய் நக­ரத்­தில் இரண்டு மாதங்­க­ளுக்கு முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தால் சீனா­வின் பொரு­ளி­யல் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டது. இனி பொரு­ளி­யலை மீண்­டும் உயிர்ப்­பிக்­க­லாம் என்று ஆவ­லு­டன் இருந்த சீனா­வுக்கு தலை­ந­கர்

பெய்­ஜிங்­கில் ஏற்­பட்­டுள்ள நெருக்­

க­டி­நிலை ஏமாற்­றத்­தைத் தந்­துள்­ளது.