சில வகை கோழிகளுக்கான தடையை நீக்கியது மலேசியா

கோழி ஏற்­று­மதி மீதான தடை­யில் மலே­சியா சில தளர்வுகளைச் செய்­துள்­ளது.

சிங்­கப்­பூர் இறக்கு­மதி­யா­ளர்­களும் கோழி இறைச்சி வியா­பா­ரி­களும் கம்­போங் கோழி­களையும் கறுப்­புக் கோழி­க­ளை­யும் இறக்கு மதி செய்ய அனு­ம­திக்­கும் வகை­யில் தளர்­வு­கள் செய்­யப்பட்­டுள்­ளன.

இந்த இரு வகைக் கோழி களையும் இறக்­கு­மதி செய்ய நேற்று முதல் மலே­சியா மீண்­டும் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக 'கீ சோங் ஃபுட்' என்­னும் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் கூறியது.

இன்றுமுதல் கம்போங் உயிர்க் கோழி­களை விற்­பனை செய்­ய­வி­ருப்­ப­தாக இந்­நி­று­வ­னம் டிக்­டோக் பக்­கத்­தில் அறி­வித்­துள்­ளது. வரும் சனிக்­கி­ழமை (ஜூன் 18) முதல் கறுப்­புக்கோழி­க­ளை­உயி­ரு­டன் இறக்­கு­மதி செய்­ய­ இருப்­ப­தா­க­வும் அந்­நி­று­வ­னம் கூறி­யது.

தடை­யில் தளர்­வு­கள் செய் வதற்­கான முடிவு இம்­மா­தம் 8ஆம் தேதி மலே­சிய அமைச்சர­வை­யில் எடுக்­கப்­பட்­ட­தாக மலே­சிய கால்­நடை சேவைத்­ து­றை­யின் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கடி­தத்தை கீ சோங் ஃபுட் நிறு­வ­னத்­தின் வர்த்­தக மேம்­பாட்­டுத் தலை­வர், 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் காட்­டி­னார்.

சில வகை கோழி­களை இறக்­கு­மதி செய்ய மலே­சியா அனு

­ம­தித்­த­போ­தி­லும் எத்­தனை கோழி­ க­ளைக் கொண்டு வர­லாம் என்­

ப­தன் தொடர்­பில் வருத்தம் இருப்

­ப­தாக அவர் கூறி­னார்.

அத்­து­டன், தடை தளர்த்­தப்­பட்­ட­துமே தங்­க­ளது நிறு­வ­னம் கம்­போங் கோழி­களை இறக்­கு­மதி செய்­யத் தொடங்­கி­விட்­ட­து என்றார் அவர்.

ஈரச்­சந்தை கோழி இறைச்சி வியா­பா­ரி­கள், கோழிச் சோறு விற்­ப­னை­யா­ளர்­கள் மற்­றும் உண­ வ­கங்­கள் இந்­நி­று­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ளர்­கள்.

தடை­யில் சில தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டா­லும், சிங்­கப்­பூ­ரில் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் 'பிராய்­லர்' வகைக் கோழி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான தடை தொடர்ந்து நீடிக்­கும் என்­றும் கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­நாட்­டுத் தேவை­யைப் பூர்த்தி செய்­ய­வும் விலை­களை நிலைப்­ப­டுத்­த­வும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோழி ஏற்­று­ம­திக்கு மலே­சியா தடை விதித்­தது.

சிங்­கப்­பூர் அதன் மொத்த கோழி இறைச்சிக்கான தேவை­யில் 34 விழுக்­காட்டை மலே­சி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்து வந்­தது. மலேசியாவிலிருந்து பெரும்­பா­லும் உயி­ரு­டன் கோழி­களை இறக்­கு­மதி செய்து, இங்கு வெட்­டப்­பட்டு, பதப்­ப­டுத்­தப்­ப­டு­வது வழக்­கம். அமெ­ரிக்கா, பிரே­சில் போன்ற நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டா­லும் அவற்­றில் பெரும்­பா­லா­னவை உறைய வைக்­கப்­பட்ட கோழி­கள்.

தடை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் இம்­மா­தத்­தின் முதல் இரு­வா­ரங்­கள் கோழி விநி­யோ­கம் வீழ்ச்­சி­யைச் சந்­தித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!