முக்கிய தொழில் நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரேனியப் படை

முக்கிய தொழில் நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரேனியப் படை

2 mins read
5c26e632-1984-4490-a674-69b538057840
கீவ் வட்டாரத்தில் உள்ள புக்கா மாவட்டத்தில் ரஷ்யப் படையினரால் கொன்று புதைக்கப்பட்ட ஒருவரின் சடலத்தை உக்ரேன் தடயவியல் நிபுணர்கள் எடுத்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி அவசியம்

செவி­ய­ரோ­டோ­னெட்ஸ் என்­னும் முக்­கிய தொழில் நக­ரில் இருந்து தமது படை­கள் பின்­வாங்­கி­ய­தாக உக்­ரே­னிய அதி­பர் விளா­டி­மிர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­துள்­ளார்.

இந்த நக­ரில் ரஷ்­யப் படை­

யி­னர் மேற்­கொண்ட பயங்­க­ரத் தாக்­கு­த­லில் உயிர்ச்­சே­தம் அதி­க­ரித்த வண்­ணம் இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

16வது வார­மாக நீடிக்­கும் போரில் ரஷ்­யாவை எதிர்த்­துப் போரி­டும் வலி­மையை உக்­ரே­னி­யப் படை­யி­னர் இழந்­த­து­போ­லத் தோன்­று­கிறது. அதன் கார­ண­மாக, தனது எல்­லை­யான கீவ் நக­ருக்கு மேல் முன்­னேறிச் செல்ல அவர்­க­ளால் இய­ல­வில்லை.

மாஸ்­கோ­வின் ஆக்­கி­ர­மிப்பு முயற்­சி­க­ளைத் தடுக்க உக்­ரே­னி­யப் படை­யி­ன­ருக்கு மேற்­கத்­திய நாடு­கள் கூடு­தல் ஆயு­தங்­கள் வழங்கி உதவ வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருப்­பதை இது உணர்த்­து­வ­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

உக்­ரே­னின் கிழக்கு வட்­டா­ர­மான லுஹான்­ஸில் உள்ள செவி­ய­ரோ­டோ­னெட்ஸ், லிசி­சேன்ஸ் என்­னும் இரட்டை நக­ரைக் கைப்­பற்­றும் முயற்­சி­யில் ரஷ்யா பல வாரங்­

க­ளாக ஈடு­பட்டு வரு­கிறது. ஆயி­னும் இவை இரண்­டும் இப்­போது வரை உக்­ரேன் வசமே உள்­ளன.

செவி­ய­ரோ­டோ­னெட்ஸ் நக­ரின் 70 முதல் 80 விழுக்­காடு வரை­யி­லான பகு­தி­களை ரஷ்­யப் படை தனது கட்­டுப்­பாட்­டில் கொண்­டு­வந்தபோதி­லும் முற்­றாக அத­னைக் கைப்­பற்­ற­வில்லை என்று வட்­டார ஆளு­நர் செர்ஜி கெய்டே கூறினார்.

"நக­ரின் எல்லா இணைப்­புப் பாலங்­க­ளை­யும் ரஷ்­யப் படை அழித்து­விட்­டது. அந்த நகரை எட்­டு­வது இனி சாத்­தி­ய­மில்லை. அங்­குள்ள மக்­களை வெளி­யேற்­று­வ­தும் முடி­யாத செயல்," என்று "ரேடியோ ஃபிரீ யூரோப்' என்­னும் வானொ­லி ­யி­டம் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, அன்­றாட போர் நில­வ­ரத்தை நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­வித்துவரும் திரு ஸெலென்ஸ்கி, நேற்று முன்­தி­னம் உரை­யாற்­று­கை­யில், "இந்­தப் போரில் மனித உயிர்­கள் மடி­வது அதி­க­ரித்து வரு­கிறது. இது ஒரு பயங்­க­ர­மான நிலைமை," என்­றார்.

உக்­ரே­னி­யப் படை­யி­ன­ரின் உயி­ரி­ழப்பு குறித்து அந்­நாட்டு அர­சாங்­கம் வெளி­யி­டு­வது அரிது. அந்த வகை­யில் கடந்த வாரம் அதன் தற்­காப்பு அமைச்­சர் ஒலேக்சி ரெஸ்­னி­கோவ் சில தக­வல்­களை வெளி­யிட்­டார்.

ஒவ்­வொரு நாளும் ஏறக்­கு­றைய 100 உக்­ரே­னிய படை­யி­னர் மர­ண­

ம­டை­வ­தா­க­வும் 500க்கும் மேற் பட்டோர் காய­ம­டை­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இது, ஜூன் 1ஆம் தேதி இருந்த நில­வ­ரத்­தைக் காட்­டி­லும் மோச­மா­னது. சரா­ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு 60 வீரர்­கள் உயி­ரி­ழப்­ப­தா­க­வும் 100 வீரர்­கள் காய­ம­டை­வ­தா­க­வும் உக்­ரே­னிய அப்­போது உக்ரேனிய அர­சாங்­கம் கணக்­கிட்­டது.