சனி, ஞாயிறு ஓய்வு நாள்கள்: பரிசீலிக்கிறது ஜோகூர் மாநிலம்

சனி, ஞாயிறு ஓய்வு நாள்கள்: பரிசீலிக்கிறது ஜோகூர் மாநிலம்

1 mins read

வாரயி­றுதி ஓய்­வு­நாள்­களில் மாற்­றம் செய்­வது பற்றி பரி­சீ­லித்து வரு­வ­தாக ஜோகூர் மாநி­லம் தெரி­வித்து உள்­ளது. தற்­போது அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு தற்­போது வெள்­ளிக்­கி­ழ­மை­யும் சனிக்­கி­ழ­மை­யும் வார­யி­றுதி ஓய்­வு­நாட்­க­ளாக உள்­ளன.

ஆனால், தனி­யார் துறை­களில் சனி, ஞாயிறு ஆகியன ஓய்வு நாள்­க­ளாக இருந்து வரு­கின்­றன. இப்­படி வெவ்­வேறு வாரவிடு­முறை நாள்­கள் இருப்­ப­தால் குடும்­பங்­கள் ஒன்­றி­ணைந்து இருப்­ப­தில் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக கருத்து தெரி­விக்­கப்­பட்டு வந்­தது.

மாநில முதல்­வர் ஒன் ஹஃபிஸ் காஸி நேற்று இது­கு­றித்­துக் கூறு­கை­யில், "அர­ சாங்­கத்­தி­லும் தனி யார் துறை­க­ளி­லும் வெவ்­வேறு ஓய்­வு­நாள்­கள் இருப்­ப­தால் பெற்­றோ­ரும் குழந்­தை­களும் ஒன்­றாக அவற்­றைக் கழிக்­க­மு­டி­வ­தில்லை என்­பதை அறி­வேன். இதனை சரி­செய்­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும். இதற்­கா­ன தீர்வு எட்­டப்­பட்­ட­தும் அது­கு­றித்த அறி­விப்பை விரை­வில் வெளி­யி­டு­வேன்," என்­றார் அவர்.

வெள்ளி, சனி அர­சாங்க விடு­முறை என்­பது 2014 ஜன­வரி 1 முதல் ஜோகூ­ரில் நடப்­பில் இருந்து வரு­கிறது. வெள்­ளிக்­கி­ழமை தொழுகையை முஸ்­லிம்­கள் சிர­ம­மின்றி மேற்­கொள்­வ­தற்கு ஏது­வாக அவ்­வாறு செய்­யப்­பட்­டது.