தேசிய கொடி: உத்தேச சட்டம் பற்றி மக்கள் கருத்து கூறலாம்

சிங்­கப்­பூ­ரில் தேசிய தின கால­கட்டத்­தின்­போது நிறு­வ­னங்­களும் தனிப்­பட்­ட­வர்­களும் இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் தாராள மாக தேசி­ய கொடி­யைப் பயன்­படுத்­தக்­கூ­டிய வாய்ப்புகள் கிட்ட இருக்­கின்றன.

தேசிய சின்­னங்­க­ளின் பய­னீடு பற்­றிய சட்­டங்­க­ளைத் தளர்த்த உத்­தே­சிக்­கப்­பட்டு உள்­ளது. அதன் தொடர்­பில் கருத்­து­க­ளைத் தெரி­யப்­ப­டுத்­தும்­படி கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு மக்­களைக் கேட்­டுக்­கொண்டுள்ளது.

சிங்­கப்­பூர் சின்­னம், கொடி மற்றும் தேசிய கீதம் (Safna) சட்டத்­திற்குப் பதி­லாக தேசிய சின்­னங்­கள் சட்­டம் என்ற புதிய ஒரு சட்டத்­தை­யும் அதன் தொடர்­பான விதி­மு­றை­க­ளை­யும் நடை­மு­றைப்­படுத்த தான் விரும்­பு­வ­தாக இந்த அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இதன் விளை­வாக தேசிய கொடி­களை மக்­கள் அங்­கீ­கா­ரம் இல்­லா­மல் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.

குறிப்பாக ஜூலை முதல் செப்­டம்­பர் வரை அவர்­க­ளுக்கு இந்த வாய்ப்­பு­கள் கிட்­டும்.

அதே­வே­ளை­யில், தேசிய சின்னங்­களைத் தவ­றாகப் பயன்­படுத்­தி­னால் அதற்­கான அதிகபட்சத் தண்­டனை 30 மடங்கு அதி­க­ரிக்­கப்­படும்.

இப்­போது $1,000 ஆக இருக்கும் அப­ரா­தம் $30,000 ஆகக்கூடும். தேசிய சின்­னங்­கள் மரி­யாதையற்ற முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைத் தடுப்­பது இதன் நோக்­கம்.

வேண்­டு­மென்றே தேசிய சின்­னங்­களை யாரா­வது தவ­றா­கப் பயன்­ப­டுத்தி இருந்­தால் அந்­தக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அதிகபட்­ச­மாக ஆறு மாதச் சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்க முடி­யும்.

தேசிய சின்­னங்­கள் தொடர்பில் மக்­கள் மேலும் அதிக உடைமை உணர்வைப் பெற இந்­தப் புதிய விதி­மு­றை­கள் உத­வும் என்று அமைச்சு நம்­பு­கிறது.

பொது­மக்­க­ளு­டன் கூடிய கலந்­து­ரை­யா­டல்­கள் ஜூலை 8ஆம் தேதி மாலை 6 மணி வரை இடம்­பெ­றும்.

தேசிய சின்­னங்­கள் தொடர்­பான விதி­மு­றை­கள் இப்­போது மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டு­கின்­றன.

அவற்­றின் ஒரு பகு­தி­யாக இந்தக் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெ­று­கின்­றன. அவற்­றின் விளை­வாக இந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் நாடா­ளு­மன்­றத்­தில் திருத்த மசோதா ஒன்று தாக்­க­லா­கக்­கூ­டிய வாய்ப்பு உள்­ளது.

பொது­மக்­கள் தங்­கள் கருத்து­களை https://www.reach.gov.sg/Participate/Public-Consultation/Ministry-of-Cu… என்ற இணையத் தளத்­தில் தெரி­விக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!