அமைதிக்கு அச்சுறுத்தல்

அமைதிக்கு அச்சுறுத்தல்

2 mins read
15b3e29d-26a6-46ba-b005-2eb7e8993b3a
புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் (வலது) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். படம்: இந்திய வெளியுறவு அமைச்சு -

அமெரிக்கா-சீனா போட்டி, உக்ரேன் போர் குறித்து அமைச்சர் விவியன் பேச்சு

வல்­ல­ரசு நாடு­க­ளான அமெ­ரிக்­கா­விற்­கும் சீனா­விற்­கும் இடை­யி­லான போட்டி, ஆசியா முழு­வ­தும் நேர­டித் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தியா மற்­றும் ஆசி­யான் நாடு­களின் வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளுக்கு இடை­யிலான சிறப்­புக் கூட்­டத்­தில் கலந்து­கொள்­வ­தற்­காக டாக்­டர் விவி­யன் இந்­தியா சென்­றுள்­ளார்.

புது­டெல்­லி­யில் நேற்று இடம்­பெற்ற கூட்­டத்­தில் பேசிய அமைச்­சர் விவி­யன், "கடந்த சில மாதங்­களாக உல­கம் வேக­மாக மாறி வரு­கிறது. அமெ­ரிக்கா-சீனா இடை­யி­லான போட்டி நம் எல்­லோர்­மீ­தும் நேர­டித் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கிறது. இவை தடுக்­கப்­ப­டா­வி­டில், பல பத்­தாண்­டு­க­ளாக நமது வளர்ச்சி, மேம்­பாடு, வளமை ஆகி­ய­வற்­றுக்கு அடிப்­படை­யா­கத் திக­ழும் அமைதிக்கும் நிலைத்­தன்­மைக்கும் அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம்," என்றார்.

டாக்­டர் விவி­ய­னும் இந்­திய வெளி­யுறவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­க­ரும் அக்­கூட்­டத்­திற்­குத் தலைமை தாங்­கி­னர்.

கொவிட்-19 பர­வ­லின்­போது இந்­தியா வழங்­கிய உத­விக்கு டாக்­டர் விவி­யன் நன்றி தெரி­வித்தார். கொவிட்-19 தொற்று பொதுச் சுகா­தா­ரத்­தின்­மீது ஏற்­ப­டுத்­திய தாக்­கம் குறித்­துப் பேசிய அவர், கடந்த இரண்­டரை ஆண்­டு­கா­லம் ஆசி­யான் நாடு­க­ளுக்­குச் சவால்­மிக்­க­தாக இருந்­தது என்­றும் குறிப்­பிட்­டார்.

இப்­போ­தைய கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிறகு இந்­தி­யா­வும் ஆசி­யா­னும் இன்­னும் வலு­வாக எழ முடி­யும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இந்­தியா-ஆசி­யான் இடை­யி­லான இந்­தச் சந்­திப்பு, இரு வட்­டா­ரங்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­பு­களை மேம்­ப­டுத்­த­வும் இப்­போ­தைய, எதிர்­கால சவால்­களை எதிர்­கொள்­ளும் ஆற்­றலை உரு­வாக்­க­வும் உத­வும் என்­றும் அமைச்­சர் விவி­யன் சொன்­னார்.

வட்­டா­ரப் போக்கு, பன்­மு­கத்­தன்மை, உல­க­ம­ய­மா­தல் ஆகி­ய­வற்­றுக்­கான ஒரு கலங்­கரை விளக்­க­மாக ஆசி­யான் எப்­போ­தும் திகழ்ந்து வரு­கிறது என்­றும் திரு ஜெய்­சங்­கர் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

"இவ்­வட்­டா­ரத்­தில் ஆசி­யான் தனக்­கென ஒரு முக்­கிய இடத்தை வெற்­றி­க­ர­மாக உரு­வாக்­கிக்­கொண்­டது. இந்தோ-பசி­பிக்­கில் உரு­வெ­டுக்­கும் உத்­தி­பூர்வ, பொரு­ளி­யல் கட்­ட­மைப்­பிற்கு அது ஓர் அடித்­த­ளம் அமைத்­துக்­கொ­டுத்­துள்­ளது," என்­றார் திரு ஜெய்­சங்­கர்.

"இதற்கு­முன் இல்­லாத அள­விற்கு இப்­போது ஆசி­யா­னின் பங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கிறது. வலு­வான, ஒன்­று­பட்ட, வள­மான ஆசி­யா­னுக்கு இந்­தியா முழு ஆத­ரவு அளிக்­கிறது. இந்தோ-பசி­பிக்­கில் ஆசி­யா­னின் நடு­நிலை முழு­மை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது," என்­றும் அவர் சொன்­னார்.