இந்தியா: 109 நாள்களுக்குப் பிறகு 10,000க்கு மேல் பதிவான தொற்று

இந்தியா: 109 நாள்களுக்குப் பிறகு 10,000க்கு மேல் பதிவான தொற்று

2 mins read

இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் கொவிட்-19 தொற்று பாதிப்பு 40% கூடி­யது. புதி­தாக 12,213 பேரை கொரோனா தொற்­றி­யி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இந்­திய சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது.

கடந்த பிப்­ர­வரி 26ஆம் தேதிக்­குப் பிறகு இந்­தி­யா­வில் ஒரே நாளில் 10,000 பேருக்­கு­மேல் கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது இதுவே முதன்­முறை.

இத­னை­ய­டுத்து, அந்­நாட்­டில் கொவிட்-19 தொற்­றி­யோர் எண்­ணிக்கை 43,257,730ஆக உயர்ந்­தது.

அத்­து­டன், தொற்றால் மேலும் 11 பேர் இறந்­து­விட, மொத்த உயி­ரி­ழப்பு 524,803 ஆனது.

அன்­றா­டம் கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­படும் விகி­தம் 2.35 விழுக்­கா­டா­க­வும் வாராந்­தர விகி­தம் 2.38 விழுக்­கா­டா­க­வும் இருக்­கிறது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் மட்­டும் நேற்று முன்­தி­னம் 4,024 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இது, அதற்கு முந்­திய நாளைக் காட்­டி­லும் 36% அதி­கம். அங்கு கொரோனா தொற்­றால் மேலும் இரு­வர் இறந்­து­விட்­ட­னர்.

மாநி­லத் தலை­ந­கர் மும்­பை­யில் மட்­டும் புதன்­கி­ழமை ஒரே நாளில் 2,293 பேரி­டம் தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது. கடந்த ஜன­வரி 23ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆக அதிக அன்­றாட பாதிப்பு.

டெல்­லி­யில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஒரே நாளில் 1,118 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், நேற்று முன்­தி­னம் அந்த எண்­ணிக்கை 1,375ஆக உயர்ந்து விட்டது.

அங்கு அன்­றா­டம் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­படும் விகி­தம் 7.01 விழுக்­கா­டா­கக் கூடி­யி­ருப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது.

தமிழ்­நாட்­டி­லும் கொரோனா பாதிப்பு ஏறு­மு­கத்­தில் இருக்­கிறது. கடந்த ஏப்­ரல் 15ஆம் தேதி 22ஆகப் பதி­வான ஒரு­நாள் பாதிப்பு, நேற்று முன்­தி­னம் 476ஆக அதி­க­ரித்­தது. மாநி­லத் தலை­ந­கர் சென்­னை­யில் மட்­டும் 221 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­து­டன், தமிழ்­நாட்­டில் கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு கொரோனா தொற்­றால் உயி­ரி­ழப்­பும் பதி­வா­கி­யது. தஞ்சா­வூ­ரைச் சேர்ந்த 18 வயது இளம்­பெண் கொரோனா தொற்­றால் மாண்டுபோனார்.

தமிழ்­நாட்­டில் இது­வரை 3,458,445 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது. அவர்­களில் 38,026 பேர் இறந்­து­விட்­ட­னர்.