வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள்; கடவுச்சீட்டிற்காகக் கால்கடுக்கக் காத்திருப்பு

வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள்; கடவுச்சீட்டிற்காகக் கால்கடுக்கக் காத்திருப்பு

2 mins read
db8c97b9-3092-4eac-96dc-ad8a165f9e65
கடவுச்சீட்டு பெறுவதற்காக இம்மாதம் 8ஆம் தேதி கொழும்பிலுள்ள குடிநுழைவு, குடிபெயர்வுத்துறைத் தலைமையகத்தில் காத்திருந்த கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ் -

கடந்த எழு­பது ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில் இலங்கை கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிப்­ப­தால் வாழ்­வா­தா­ரத்­திற்­காக அந்­நாட்­டை­விட்டு வெளி­யேறி, வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல பல­ரும் விரும்புகின்­ற­னர்.

வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு தேவை என்­ப­தால், கடவுச்சீட்டு கோரி இலங்கை குடி­நு­ழைவு, குடி­பெ­யர்­வுத்துறை தலை­மை­ய­கத்­தில் கூட்­டம் அலை­மோ­து­கிறது.

சென்ற ஆண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் 91,331 பேருக்­குக் கட­வுச்­சீட்டுகள் வழங்­கப்­பட்ட நிலை­யில், இவ்­வாண்­டின் அதே கால­கட்­டத்­தில் 288,645 கட­வுச்­சீட்டுகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை அர­சுத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கை­யில் உண­வுப்­பொ­ருள், எரி­பொ­ருள், மருந்­து­க­ளுக்­குக் கடும் தட்­டுப்­பாடு நில­வு­கிறது; விலை­வா­சி­யும் உயர்ந்­து­விட்­டது.

இத­னால் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வேலை பார்க்க விரும்­பு­வோ­ருக்கு ஆத­ர­வ­ளிக்க அர­சாங்­க­மும் விரும்­பு­கிறது. அதன்­மூ­லம் அவர்­கள் தாய்­நாட்­டிற்கு அதி­க­மாகப் பணம் அனுப்­பு­வர் என்­பது அர­சாங்­கத்­தின் நம்­பிக்கை. அண்­மைய மாதங்­க­ளாக வெளி­நா­டு­களில் வசிக்­கும் இலங்­கை­யர் சொந்த ஊருக்கு அனுப்­பும் பணத்­தின் மதிப்பு பாதி­யா­கக் குறைந்து­விட்­ட­தாக அந்­நாட்­டின் மத்திய வங்­கித் தர­வு­கள் குறிப்­பி­டு­கின்­றன.

கடவுச்சீட்டு விண்­ணப்­பங்­கள் குவிந்து வரு­வ­தால் கொழும்பு குடி­நு­ழை­வுத் துறை தலை­மை­ய­கத்­தில் பணி­யாற்­றும் 160 ஊழி­யர்­களும் சோர்ந்­து­போய்­விட்­ட­தா­கக் குடி­நுழை­வுத்­துறை உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­னார்.

பணி நேரத்தை நீட்­டித்­துள்ள குடி­நு­ழை­வுத்­துறை, முன்­பைப்­போல மூன்று மடங்கு கடவுச்சீட்டுகளை வழங்கி வரு­கிறது.

"மக்­கள் விரக்­தி­யில் இருப்­ப­தால் அவர்­க­ளைச் சமா­ளிப்­பது மிக­வும் சிர­ம­மாக உள்­ளது. இவ்­வ­ளவு பேரின் தேவை­யை­யும் பூர்த்தி­செய்­யும் அள­விற்­குப் போது­மான வசதி இல்லை என்­பது அவர்­களுக்­குப் புரி­வ­தில்லை. அத­னால், அவர்­கள் கோபப்­பட்டு, எங்­கள்­மீது பழி­சு­மத்­து­கின்­ற­னர். ஆனா­லும், எங்­களால் ஒன்­றும் செய்ய முடி­யாது," என்­றார் திரு சந்­தி­ர­லால்.