புதிதாக 128,100 வேலை வாய்ப்பு

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர் சந்தை தொடர்ந்து இறுக்கமாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதத்­தில் வேலை வாய்ப்­பு­கள் புதிய உச்­சத்தைத் தொட்­டன.

தேவை­கள் அதி­க­ரிப்­பதை கருத்­தில் கொண்டு நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­க­ளைச் சேர்க்­கின்­றன. ஏற்­கெ­னவே காலி­யாக இருந்த இடங்­க­ளை­யும் அவை நிரப்­பு­கின்­றன. ஜன­வரி முதல் மார்ச் வரை புதிய வேலை வாய்ப்­பு­க­ளின் எண்­ணிக்கை 128,100 ஆக இருந்தது.

இந்த எண்­ணிக்கை டிசம்­ப­ரில் 117,100 ஆக இருந்­ததாக மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட தொழி­லா­ளர் சந்தை அறிக்கை தெரி­விக்­கிறது.

வேலை இல்­லா­த­வர்­க­ளுக்­கும் கிடைக்­கும் வேலை­க­ளுக்­கும் இடைப்­பட்ட விகி­தாச்­சா­ரம் 2.42 ஆகக் கூடி­யது. அதா­வது, வேலை­யில்­லாத ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இரண்­டுக்­கும் மேற்­பட்ட வேலை வாய்ப்­பு­கள் கிடைத்­தன.

கடந்த 1998க்குப் பிறகு இது­தான் ஆக உச்­சம் என்று அமைச்சு தெரி­விக்­கிறது. வேலை இல்­லா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து இருக்­கிறது. வேலை வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கின்­றன என்­பதை அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

இருந்­தா­லும் முந்­திய காலாண்­டில் 17%ஆக இருந்த வேலை வாய்ப்பு அதி­க­ரிப்பு விகி­தம் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 9% ஆகக் குறைந்­தது.

கட்­டு­மா­னம், உற்­பத்­தித் துறை­களில் அதிக வேலை வாய்ப்­பு­கள் நில­வின. அந்த வேலை­கள் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்நுட்பர் களுக்கு அல்­லாத வேலை­கள் ஆகும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களே அவற்றை வழி­வ­ழி­யாக பார்த்து வருகிறார்கள்.

நிதிச் சேவை­கள், தக­வல் தொடர்பு, பொது நிர்­வா­கம், கல்வி, நிபு­ணத்­து­வச் சேவை­கள் ஆகிய துறை­களில் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில் நுட்பர்கள் ஆகி­யோ­ருக்கு அதிக வேலை­வாய்ப்­பு­கள் இருந்­தன.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் உள்­ளிட்ட சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கான வேலை நிய­ம­னங்­கள் 2019ல் கொரோ­னா­வுக்கு முந்­திய அளவை­விட 3.9% அதி­க­ரித்து இருப்­ப­தாக அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

ஒட்­டு­மொத்­த­மாக பார்க்­கை­யில், மொத்த வேலை நிய­ம­னங்­கள் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 42,000 அதி­க­ரித்­தன. இந்த அதி­க­ரிப்பு முந்திய காலாண்­டில் 47,900 ஆக இருந்­தது.

இந்த எண்­ணிக்கை வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளைச் சேர்க்­கா­மல் கணக்­கி­டப்­பட்ட ஒன்று. மொத்த வேலை நிய­மன அதி­க­ரிப்­பில் சிங்­கப்­பூர்­வா­சி­க­ளாக அல்­லா­த­வர்­களே அதி­கம் என்று அமைச்சு தெரிவித்தது.

படிப்­ப­டி­யாக எல்­லை­கள் திறக்­கப்­பட்­ட­தும் வெளி­நாட்டு ஊழி­யர்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கும் வேலை­களை முத­லா­ளி­கள் நிரப்­பி­ய­தும் இதற்­குக் கார­ணம். இருந்­தா­லும்­கூட கடந்த மார்ச் மாதம் இத்­த­கைய சிங்­கப்­பூர்­வா­சி­கள் அல்­லாத ஊழி­யர்­க­ளின் வேலை நிய­மனம் கொரோ­னா­வுக்கு முந்­திய அளவு­டன் ஒப்­பி­டு­கை­யில் 15% குறை­வா­கவே இருக்­கிறது.

சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கான வேலை நிய­ம­னங்­க­ளைப் பார்க்­கை­யில் பல துறை­க­ளி­லும் அப்­ப­டி­யும் இப்­ப­டி­யு­மா­கப் போக்­கு­கள் காணப்­பட்­டன.

நிதிச் சேவை­கள், தக­வல் தொடர்பு, நிபு­ணத்­து­வச் சேவை­கள், சுகா­தார சமூ­கச் சேவை­கள் போன்ற வள­ரும் துறை­களில் இவர்­க­ளுக்­கான வேலை நிய­மனங்­கள் தொடர்ந்து கூடின. மாறாக பய­னீட்­டா­ளர்­களை எதிர்­கொள்­ளக்­கூ­டிய துறை­களில் நிய­ம­னங்­கள் குறைந்­தன.

குடி­மக்­களைப் பொறுத்­த­வரை வேலை­யின்மை விகி­தம் கொஞ்­சம் குறைந்­தது. சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கான நீண்­ட­கால வேலை­யின்மை விகி­தம் மேம்­பட்டு இருக்­கிறது.

ஆட்­கு­றைப்பு சாதனை அள­வாக குறைந்­தது. அந்த எண்­ணிக்கை 1,320 ஆக இருந்­தது. அதா­வது ஒவ்­வொரு 10,000 ஊழி­யர்­க­ளுக்­கும் ஆறு பேர் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­னார்­கள்.

முதல் காலாண்டில் ஆட்குறைப்புக்கு ஆளான சிங்கப்பூர்வாசிகளில் 71.5 விழுக்காட்டினருக்கு ஆறே மாதங் களுக்குள் வேலை கிடைத்துவிட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!