அமெரிக்கா-உக்ரேன் மூன்று ஆண்டு உடன்பாடு: உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண இணக்கம்

உல­க­ளா­விய நிலை­யில் காணப்­படும் உணவு நெருக்­க­டிக்­குத் தீர்வு­காண அமெ­ரிக்­கா­வும் உக்­ரே­னும் மூன்­றாண்டு வேளாண்மை பங்­காளித்­துவ உடன்­பாட்டை செய்து கொண்டு இருப்­ப­தாக ஐநா­வில் அமெ­ரிக்க வேளாண்மை அமைச்­சர் அறி­வித்­தார்.

அந்தப் புரிந்­து­ணர்­வுக் குறிப்பில், அமெ­ரிக்க அமைச்­சர் டாம் வில்­சாக்­கும் உக்­ரே­னின் வேளாண்மை அமைச்­சரும் சில நாட்களுக்கு முன் மெய்­நி­கர் ரீதி­யில் கையெ­ழுத்­திட்­டார்­கள்.

உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்­ப­தால் உல­க­ளவில் உணவு நெருக்­கடி பெரிதும் அதி­கரித்­து­விட்­டது.

உணவு தானி­யங்­க­ளை­யும் விதை­க­ளை­யும் ஏற்­று­மதி செய்­யக்­கூ­டிய உல­கின் நான்­கா­வது ஆகப் பெரிய நாடாக உக்­ரேன் இருந்­தது. ஆனால், போர் கார­ண­மாக இந்த நிலை மாறி­விட்­டது. இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் உக்­ரே­னுக்குத் தொழில்­நுட்ப உத­வியை வழங்­கு­வ­தில் அந்த உடன்­பாடு ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் என்று அமெ­ரிக்க அமைச்­சர் தெரி­வித்­தார்.

போருக்­குப் பிறகு உக்­ரேன் தனது வேளாண் தொழில்­துறையைச் சீர­மைக்க அமெ­ரிக்கா உத­வும் என்­றார் அவர். உணவு நெருக்­கடி­யைத் தீர்க்க இதர பல நட­வ­டிக்­கை­க­ளை­யும் அமெ­ரிக்கா எடுக்­கும் என்­றார் திரு வில்­சாக்.

உக்­ரேன் போர் கார­ண­மாக உல­க­ள­வில் உண­வுப் பொருள்­கள், எரி­பொ­ருள் விலை­கள் விண்­ணைத் தொடும் அளவுக்கு அதி­க­ரித்­து­விட்­டது. மத்­திய கிழக்கு, ஆசியா, ஆப்­பி­ரிக்க நாடு­களில் உண­வுப் பொருள் பற்­றாக்குறை ஏற்­ப­டக்­கூடிய ஆபத்து அதி­க­ரித்துள்ளது.

உல­க­ள­வில் கொரோ­னா­வால் பெரும் பாதிப்பு ஏற்­கெ­னவே ஏற்­பட்­டுவிட்டது. பரு­வ­நிலை மாற்­றங்­களும் பிரச்சினையாக உள்ளன.

இவற்­றின் கார­ண­மாக உணவு நெருக்­கடி அதி­க­ரித்து வரு­கிறது. இதனால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பட்­டினி கிடக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­வி­டும் என்று ஐநா எச்­ச­ரித்து இருக்­கிறது.

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்து இருப்­ப­தால் அந்த நாட்­டில் ஏறக்­கு­றைய 25 மில்­லி­யன் டன் தானி­யங்­கள் தேங்­கிக் கிடக்­கின்­றன. அவற்றை விடு­விக்க உல­க­ளா­விய முயற்சி இடம்­பெற்று வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!