'அக்னி பாதை' திட்டம் வேண்டாம் என போராட்டம்; புதிய சலுகைகள் அறிவிப்பு

'அக்னி பாதை' திட்டம் வேண்டாம் என போராட்டம்; புதிய சலுகைகள் அறிவிப்பு

2 mins read
163bd655-1e14-4029-9be6-5ef798c60d8f
சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் இழுத்துச் செல்கின்றனர். படம்: ஈபிஏ -

இந்­தி­யா­வில் 'அக்னி பாதை' எனும் ராணு­வத்­துக்கு ஆள் சேர்க்­கும் திட்­டத்­துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதால் புதிய சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

அக்­னி­பாதை திட்­டத்­தின் மூலம் ராணு­வத்­தில் சேரும் வீரர்­க­ளுக்கு மத்­திய துணை ராணு­வப் படை மற்­றும் அசாம் துப்­பாக்கிப் படை­களில் பத்து விழுக்­காடு இடம் ஒதுக்­கப்­படும் என்று உள்­துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

இந்த இரு படைப் பிரிவுகளிலும் வயது வரம்­பில் மூன்று ஆண்­டுகள் வரை தளர்வு வழங்­க­வும் அமைச்சு முன் வந்­துள்­ளது.

'அக்னி பாதை' திட்டத்துக்கு எதிராக பீஹார், ஜார்க்­கண்ட், உத்­தரப்பி­ர­தே­சம், ஹரி­யானா, தெலுங்­கானா மாநிலங்களில் ஆர்ப்­பாட்­டங்­கள் தீவிரமடைந்து உள்­ளன.

ஆர்ப்­பாட்­டத்­தில் இது­வரை ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். உத்­த­ரப் பிர­தே­சத்­தில் மட்­டும் 200க்கும் மேற்­பட்­டோர் சிறை­யில் அடைக்­கப் பட்­ட­னர். மேலும் 200க்கும் மேற்­பட்ட ரயில்­ சேவைகள் ரத்து செய்­யப்­பட்­டன.

இந்­நி­லை­யில் பீஹா­ர் மாநி­லம் முழு­வ­தும் முழு அடைப்பு பேராட்­டத்­துக்கு நேற்று மாண­வர்­கள் அழைப்பு விடுத்­த­தால் பதற்றம் அதிகரித்தது.

இதை­ய­டுத்து அம்­மா­நி­லத்­தில் உள்ள 18 மாவட்­டங்­களில் இணை­யத் தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது. ஃபேஸ்புக், வாட்ஸ்­ஆப் போன்ற சமூகத் தளங்­கள் முடக்­கப்­பட்­ட­தாக பீஹா­ரின் மூத்த காவல்­துறை அதி­கா­ரி­ சஞ்­சய் சிங் தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 14ஆம் தேதி 'அக்னி பத்' என்று இந்­தி­யில் குறிப்­பி­டப்­படும் 'அக்னி பாதை' திட்­டத்தை இந்­திய அரசு கொண்டு வந்­தது.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு மட்­டும் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் ராணு­வத்­தில் பணி­யாற்ற இது வழி செய்­கிறது.

ஆயி­ரக்­க­ணக்­கான இளை­யர் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்­கும் நோக்­கத்­தோடு இந்­தத் திட்­டத்தை அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தா­லும் ராணு­வத்­தில் நிரந்­த­ர­மாக வேலை செய்­யும் கனவை அது சிதைத்து விட்­ட­தாக இந்­திய இளை­யர்­கள் ஆவேசமடைந்துள்ளனர்.

தமி­ழ­கத்­தி­லும் குறிப்­பாக சென்­னை­யில் இத்­திட்­டத்­திற்கு எதி­ராக இளை­யர்­கள் போர்க் குரல் எழுப்பி­ உள்­ள­னர். ரயில் மறி­ய­லி­லும் அவர்­கள் ஈடுபட்­ட­தாக தமி­ழக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று காலை சென்னை தலை­மைச் செய­ல­கத்­துக்கு அருகே சில இளை­யர்­கள் திடீர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. தக­வல் அறிந்து அங்கு வந்த காவல்­து­றை­யி­னர் அவர்­களை கலைந்து செல்ல வலி­யு­றுத்­தி ­னர்.

தமி­ழ­கத்­தின் இதர பகு­தி­க­ளி­லி­ருந்­தும் ஏரா­ள­மான இளை­யர்­கள் சென்­னையை நோக்கி படை­யெ­டுக் கலாம் என்­பதால் தலை­ந­க­ரில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.