ஒற்றைத் தலைமை விவகாரம்; மோதல் முற்றுகிறது; அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டார்

2 mins read
91e62ccd-537c-4591-8ef0-771305c1213f
அதிமுக தலைமையகத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிமுக நிர்வாகி.படம்: இந்திய ஊடகம் -

அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமை விவ­கா­ரத்­தில் எடப்­பாடி பழனி சாமிக்­கும் ஓ. பன்­னீர்­செல்­வத்­துக்­கும் இடையே மோதல் முற்றி வரு­கிறது. இதன் தொடர்­பில் இரு­வ­ரும் தனித்­த­னி­யாக தங்­க­ளு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தொடர்ந்து ஆலோ­சனை நடத்தி வரு­கின்­ற­னர்.

அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமையே தேவையே இல்லை என்று பன்­னீர்­செல்­வம் கூறி வரு­கி­றார். ஆனால் எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­னர் ஒரு­வர் மட்­டுமே கட்­சியை நிர்­வ­கிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நேற்று ஓ. பன்னீர்­செல்­வம் நேற்று அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தில் தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார்.

அந்­தச் சம­யத்­தில் அதி­முக பொதுக் குழு­வில் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய தீர்­மா­னம் குறித்து தீர்­மா­னக் குழு­வி­னர் ஆலோ­சனை நடத்­தி­னர். ஆலோ­ச­னைக் கூட்­டத்தை முடித்­துக்­கொண்டு தீர்­மா­னக் கூட்­டத்­துக்கு வந்த ஓ. பன்னீர் ­செல்­வம், அங்கு சி.வி.சண்­மு­கம், ஜெயக்­கு­மார், ஆர்.பி. உத­ய­கு­மார் ஆகி­யோ­ரைச் சந்­தித்­தார்.

இந்­தச் சூழ்­நி­லை­யில் தலைமை அலு­வ­ல­கத்­தில் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் ஆத­ர­வா­ள­ரான பெரம்­பூர் மாரி­முத்து மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. முன்­னாள் பகுதி செய­லா­ள­ரான அவர் ரத்­தக்­க­றை­யு­டன் உட­ன­டி­யாக தலைமை அலு­வ­ல­கத்தை விட்டு வெளி­யே­றி­னார். இதை­ய­டுத்து ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ராக ஜெயக்­கு­மார் ஆத­ர­வா­ளர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

தாக்­கு­தல் நடத்­தி­யது யார் என்­பது தெரி­ய­வில்லை. வெளி­ந­பர் என்று சில தொண்­டர்­கள் கூறி­னர்.

இந்த நிலை­யில் கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் சம­ரச முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ள­னர்.

சில நாட்­க­ளுக்கு முன்பு ஈபி­எஸ், ஓபி­எஸ் ஆகிய இரு­வ­ரை­யும் தம்­பி­துரை சந்­தித்து சமா­தா­னப் பேச்சு நடத்­தி­னார். அது வெற்றி பெறாத சூழ்­நி­லை­யில் செல்­லூர் ராஜூ இரு தரப்பின­ரி­ட­மும் பேசி வரு­கி­றார்.

இதற்கிடையே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சுவரொட்டி போட்டி தொடங்கியுள்ளது.

சேலத்தில் இருந்து திருவண்ணா மலைக்கு வந்த எடப்பாடி பழனி சாமிக்கு, 'ஒற்றைத் தலைமையே', 'ஒற்றைத் தலைமை நாயகரே', 'பொதுச்செயலாளரே' என அவரது ஆதரவாளர்கள் வழியெங்கும் சுவ வொட்டி ஒட்டியிருந்தனர்.

இதற்குப் போட்டியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதே திரு வண்ணாமலையில் 'ஒற்றைத் தலைமையை ஏற்க வாருங்கள்' என்று குறிப்பிட்டு பன்னீர்செல்வம் படத்துடன் சுவரொட்டிகளை வெளி யிட்டு இருந்தனர்.