கொவிட்-19 தொற்று பரவிய காலத்தில் மன வுறுதி, மீள்திறன், சமூகப் பொறுப்பு டன் இருந்தனர்.
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் இளையர்கள் பல அனு பவங்களை இழந்து இருக்கலாம். ஆனால் மனவுறுதி, மீள்திறன், சமூகப் பொறுப்புணர்வு ஆகிய பண்புகளை இளையர்கள் பெற்றனர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பாராட்டியிருக்கிறார்.
'பல்கலைக்கழக குரல்கள்' எனும் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஓங், இளையர்கள் சந்தித்தப் பிரச்சினைகளைப் பட்டியிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள இளையர்கள் வெளிநாடு போக முடியவில்லை. வேலையிடப் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன. பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் அவற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தனர். தேசிய பள்ளி விளையாட்டு களில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க முடியவில்லை என்று அமைச்சர் கூறினார்.
மரினா பொலிவார்டில் உள்ள என்டியுசி நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல துறைத் தொழிற்கல்லூரி, தொடக்கக் கல்லூரி, தொழில்நுட்பப் பல் கலைக் கழகம், பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கொள்ளைநோய் தாக்கம் குறித்து மாணவர்களிடம் கருத்தறியப்பட்டது. மேலும் கொவிட்-19 உடன் வாழ்வதில் உள்ள சவால்களும் கவலைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
தொடர்ந்து பேசிய திரு ஓங், கொவிட்-19 பிந்திய காலத்தில் உலகத்தை தலைசிறந்த இடமாக மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டு உள்ளது என்றார்.
கல்வி, போக்குவரத்து, சுகா தாரப் பராமரிப்பு ஆகிய துறை களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைதொட்டும் அவர் பேசினார்.
வட்டார அரசியல் பிரச்சி னைகள், மக்களின் வாழ்க்கையை மறுவடிவமைக்கும் தொழில்நுட்பம், நவீன உலகின் மோசமான கொள்ளைநோய் நெருக்கடி போன்ற சவால்மிக்க சூழ்நிலையில் இன்றைய இளையர்கள் வாழ் கின்றனர்.
அதே சமயத்தில் தொற்றுநோய் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு விநி யோகிக்கப்பது, தங்குமிடங்களில் நோய் பரவியபோது தங்களுடைய இருப்பிடத்தை வெளிநாட்டு ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்டது, தடுப்பூசி மற்றும் தொலைபேசி நேரடிச் சேவை நிலையங்களில் பணியாற்றியது உட்பட தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ மாணவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"நீங்கள் எதை இழந்திருந்தாலும் தொற்றுநோய்க் காலத்தில் பள்ளி வாழ்க்கையை கடந்துவந்த தலைமுறை என்ற பெருமை உங்களுக்கு உள்ளது. நீங்கள் சிலவற்றை இழந்திருந்தாலும் மன வுறுதி, மீள்திறன், சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பலவற்றை நிறைய பெற்றுள்ளீர்கள்," என்று திரு ஓங் மேலும் சொன்னார்.

