நேட்டோ: போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கக்கூடும்; உக்ரேனுக்கு நவீன ஆயுதங்கள் வேண்டும்

நேட்டோ: போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கக்கூடும்; உக்ரேனுக்கு நவீன ஆயுதங்கள் வேண்டும்

2 mins read

உக்­ரேன் போர் ஆண்டுக்கணக்­கில் நீடிக்­கக்­கூ­டும் என்று நேட்டோ எச்­ச­ரித்­துள்­ளது. உக்­ரேன் படை வீரர்­க­ளுக்கு அதிநவீன ஆயு­தங்­கள் தேவை என்று அந்த அமைப்­பின் தலை­மைச் செய­லா­ளர் ஜென்ஸ் ஸ்டோ­லென்­பர்க் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இத­னி­டையே, உக்­ரே­னில் மரி­யபோல் நக­ரில் எஃகு ஆலை ஒன்றைத் தற்­காத்த உக்­ரேன் உயர்­நிலை தள­ப­தி­கள் இரண்டு பேர் புலன்­வி­சா­ர­ணைக்­காக ரஷ்­யா­வுக்கு கொண்­டு­செல்­லப்­பட்டு இருப்­ப­தாக 'டாஸ்' செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

உக்­ரே­னின் கிழக்கு நகர்­களில் தாக்கு­தலை ரஷ்யா கடு­மை­யாக்கி வரு­வ­தால் மோச­மான சூழ்­நிலை தவிர்க்க இய­லா­தது என்­றும் அதற்கு தான் ஆயத்­த­மாகி வரு­வ­தா­க­வும் லுஹான்ஸ்க் வட்­டார ஆளு­நர் ஹைடாய் கூறி­னார்.

இவ்வே­ளை­யில், மைகோ­லி­யாவ், ஒடேசா ஆகிய நகர்­க­ளுக்­குச் சென்று போர்க்களப்­ பகு­திக­ளைப் பார்­வை­யிட்ட உக்ரேனிய அதி­பர் ஸெலென்ஸ்கி இந்­தப் போரில் உக்­ரேன் வெற்றி பெறும் என்று திட்­டவட்டமாகத் தெரி­வித்­தார்.

ரஷ்ய அதி­பர் புட்­டின் இம்­மா­தம் 17ஆம் தேதி முத­லீட்­டா­ளர்­கள் கூட்­டத்­தில் பேசி­ய­போது, ரஷ்யா மீது தடை­களை விதித்த மேற்­கத்­திய நாடு­க­ளைச் சாடி­னார். தடைகளை எல்­லாம் ரஷ்யா மீண்டு­ வரும் என்று அவர் உறு­தி­பட கூறினார்.

இதற்­கி­டையே, உக்­ரே­னும் மால்­டோ­வா­வும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் உறுப்­பி­ன­ரா­ன­வ­தற்­கான வேட்­பா­ளர்­க­ளாக ஆவதற்கு அந்த ஒன்­றி­யத்­தின் நிர்­வாக அமைப்பு பரிந்­துரை செய்து இருக்­கிறது.

இதன்­மூ­லம் உக்­ரே­னும் மால்­டோ­வா­வும் நேட்டோ அமைப்­பில் சேர்­வ­தற்­கான வாய்ப்­பு­ அதி­க­ரித்துள்ளதாக தெரி­கிறது.

அடுத்த வாரம் நடக்­கும் உச்­ச­நிலைக் கூட்­டத்­தில் ஐரோப்­பிய ஆணை­யத்­தின் இந்த முடிவு ஏற்­றுக்­கொள்­ளப்படு­மா­னால் அது உக்­ரே­னுக்கு தார்­மீக தைரி­யத்­தைக் கொடுப்­ப­தாக இருக்­கும்.

அதோடு, உக்ரேனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய அதி­ப­ர் புட்டினுக்கு மேற்­கத்திய நாடு­கள் வைக்­கும் ஒரு குட்­டா­க­வும் அது இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இந்நிலையில் உக்ரேனில் ரஷ்யத் தாக்கு தல்கள் தொடர்கின்றன.