300 புது விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டம்

300 புது விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டம்

2 mins read

ஏர் இந்­தியா விமா­னப் போக்­கு­வரத்து நிறு­வ­னம் புதி­தாக 300 விமா­னங்­களை வாங்­கு­வது குறித்­துப் பரி­சீ­லித்து வரு­வ­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இது, விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை வர­லாற்­றில் ஆகப் பெரிய ஒப்­பந்­தங்­களில் ஒன்­றாக விளங்­கும்.

அண்­மை­யில் டாடா குழு­மத்­திடம் கைமா­றிய ஏர் இந்­தியா நிறு­வ­னம், ஏர்­பஸ் ஏ320 அல்­லது போயிங் 737 மேக்ஸ் அல்­லது அவ்­விரு விமா­னங்­க­ளை­யும் வாங்கும் எனத் தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. 300 போயிங் 737 மேக்ஸ் விமா­னங்­களின் விலை $40.5 பில்­லி­ய­னாக இருக்­கும் என்­றும் ஆயி­னும், பெரிய அள­வி­லான கொள்­மு­த­லின்­போது விலைக்­க­ழிவு வழங்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், 300 விமா­னங்­களைத் தயா­ரித்து, வழங்­கு­வ­தற்­குப் பல ஆண்­டு­கள் ஆக­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

ஏர்­பஸ் நிறு­வ­னம் ஒரு மாதத்­திற்கு, குறு­கிய உடல்­ப­கு­தி­யைக் கொண்ட 50 விமா­னங்­களைத் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­திக்­குள் அந்த எண்­ணிக்­கையை 65 ஆக­வும் 2025ஆம் ஆண்­டு­வாக்­கில் 75 ஆக­வும் உயர்த்த அந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்டுள்­ளது.

இருப்­பி­னும், 300 விமா­னங்­களை வாங்­கு­வது தொடர்­பில் ஏர் இந்தியா, போயிங் நிறு­வ­னங்­கள் கருத்­துக் கூற மறுத்­து­விட்­டன.

அதே வேளை­யில், இப்­போ­தைய மற்­றும் சாத்­தி­ய­முள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் எப்­போ­தும் தொடர்­பில் இருந்து வரு­கிறோம் என்­றும் ஆனா­லும் விமா­னங்­களை வாங்­கு­வது குறித்த பேச்­சு­வார்த்தை ரக­சி­ய­மாக வைக்­கப்­படும் என்­றும் ஏர்­பஸ் நிறு­வனம் தெரி­வித்­தது.

முன்­ன­தாக, நீண்­ட­தொ­லைவு பறக்­கும் ஏ350 விமா­னங்­களை வாங்­கு­வது தொடர்­பில் ஏர்­பஸ் நிறு­வ­னத்­து­டன் டாடா குழு­மம் விரை­வில் ஒப்­பந்­தம் செய்­து­கொள்­ள­லாம் என்று இம்­மாத முற்­ப­கு­தி­யில் புளூம்­பெர்க் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

அவ்­வி­மா­னங்­கள் புது­டெல்­லி­யில் இருந்து அமெ­ரிக்­கா­வின் மேற்­குக் கட­லோ­ரம்­வரை செல்­லும் திறன் படைத்­தவை.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில் இந்­திய அர­சு வசமிருந்த ஏர் இந்­தியா நிறு­வ­னம், டாடா குழு­மத்­தி­டம் விற்­கப்­பட்­டது. நட்­டத்­தில் இயங்­கிய ஏர் இந்­தியா நிறு­வனத்தை டாடா குழு­மம் 18,000 கோடி ரூபாய் விலை­கொ­டுத்து வாங்­கி­யது. அதில் 15% தொகை அர­சாங்­கத்­திற்­குச் செல்­லும் என்­றும் எஞ்­சிய தொகை ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தின் கடனை அடைக்­கப் பயன்­படுத்­தப்­படும் என்றும் சொல்லப்பட்டது.