இலங்கை அதிபர் செயலக நுழைவாயில்களை மறித்துப் போராட்டம்

இலங்கை அதி­பர் செய­ல­கம் மற்­றும் நிதி­ய­மைச்­சின் நுழை­வா­யில்­களை மறித்து நேற்­றுக் காலை போராட்­டத்­தில் ஈடு­பட்ட 21 பேரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

ஆயி­னும், கைதான 21 பேரை­யும் பிணை­யில் விடு­விக்­கு­மாறு கொழும்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

அவர்­கள் அனை­வ­ரும், கோத்­த­பாய ராஜ­பக்சே விலக வேண்­டும் எனக் காலி முகத்­தி­டல் பகு­தி­யில் முகா­மிட்­டுப் போராடி வரு­ப­வர்­கள் எனக் கூறப்­பட்­டது.

இதன் கார­ண­மாக, அதி­பர் செய­ல­கப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் அங்கு வருகை தந்த பொது­மக்­க­ளுக்­கும் இடை­யூறு ஏற்­பட்­ட­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது. அத்­து­டன், அனைத்­து­ல­கப் பண நிதி­யப் பேரா­ளர் குழு­விற்­கும் இலங்கை அர­சுக்­கும் இடையே பேச்­சு­வார்த்தை தொடங்­கு­வ­தும் தாம­த­மா­னது.

பின்­னர் அக்­கு­ழு­வி­ன­ரு­டன் இலங்­கைப் பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்கே பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.

அனைத்­து­ல­கப் பண நிதி­யப் பேரா­ளர் குழு இம்­மா­தம் 30ஆம் தேதி­வரை இலங்­கை­யில் இருந்து, பேச்­சு­வார்த்­தை­க­ளைத் தொட­ரும்.

“இந்­தக் கடி­ன­மான கால­கட்­டத்­தில், அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தின் கொள்­கை­க­ளுக்­குட்­பட்டு, இலங்­கைக்கு ஆத­ர­வ­ளிக்­கும் எங்­க­ளது கடப்­பாட்டை மறு­வு­று­திப்­படுத்து­கி­றோம்,” என்று அக்­குழு தெரி­வித்­தது.

இலங்­கை­யைப் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் இருந்து மீட்க உதவு­வ­தற்கு அனைத்­து­ல­கப் பண நிதி­யம் பல்­வேறு நிபந்­த­னை­களை முன்­வைத்­துள்­ள­தா­கச் சொல்­லப்­படு­கிறது.

‘பட­கில் வந்­தால் அனு­ம­தி­யோம்’

இதற்­கி­டையே, படகு வழி­யாக வரும் இலங்­கை­யர்­களை ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று ஆஸ்­தி­ரே­லியா தெரி­வித்­துள்­ளது.

இலங்கை மக்­கள் அடைக்­க­லம் நாடி படகு வழி­யாக ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு வரு­வது அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், அத­னைத் தடுத்து நிறுத்­தும்­படி வலி­யு­றுத்­து­வ­தற்­காக ஆஸ்­தி­ரே­லிய உள்­துறை அமைச்­சர் கிளேர் ஓ’நீல் அவ­ச­ர­மாக நேற்று இலங்கை புறப்­பட்­டுச் சென்­றார்.

கடந்த மாதம் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புதிய ஆட்சி அமைந்­த­பின், அடைக்­க­லம் நாடி நான்கு பட­கு­களில் பய­ணம் செய்த இலங்­கை­யர்­களை ஆஸ்­தி­ரே­லிய, இலங்கை அதி­கா­ரி­கள் இடை­ம­றித்­த­னர்.

இந்­நி­லை­யில், இலங்­கைக்கு 50 மில்­லி­யன் டாலர் உதவி வழங்­கப்­படும் என ஆஸ்திரேலியா அறிவித்து இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!