பணவீக்கத்தைச் சமாளிக்க $1.5 பி. தொகுப்புத் திட்டம்

உல­க­ளா­விய நிலை­யில் பண­வீக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்­கும் எளி­தில் பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டிய பிரிவினருக்கும் உதவ $1.5

பில்­லி­யன் ஆதரவு தொகுப்­புத் திட்­டத்தை துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று அறி­வித்­தார்.

$400 பெறு­மா­ன­முள்ள பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்­றுச்­சீட்டு ரொக்கமாக வழங்­கப்­படும் என ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­போது கூடு­த­லாக $300 வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிட்­டத்­தட்ட 1.5 மில்­லி­யன் குறைந்த வரு­மான, நடுத்­தர வரு­மான ஊழி­யர்­களும் ஓய்­வு­பெற்று வரு­மா­னம் இல்­லா­மல் இருப்­போ­ரும் இதன்­மூ­லம் பல­ன­டை­வர்.

அது­மட்­டு­மல்­லாது, ஒவ்­வொரு சிங்­கப்­பூர் குடும்­பத்­துக்­கும் $100 பெறு­மா­ன­முள்ள பய­னீட்­டுக் கட்­டண வழங்­கு தொகை வழங்­கப்­படும். உள்­ளூர் நிறு­வ­னங்­

க­ளுக்­கும் கூடு­தல் உதவி வழங்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. உதா­ர­ணத்­துக்கு, தகு­தி­

பெ­றும் டாக்சி ஓட்­டுர்­க­ளுக்­கும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்­கும் ஆகஸ்ட் மாதத்­தில் ஒரு­முறை நிவா­ர­ணத் தொகை­யாக $150 தரப்­படும்.

அதி­க­ரித்­துள்ள எரி­பொ­ருள் விலை­யைச் சமா­ளிக்க இந்­தத் தொகை வழங்­கப்­ப­டு­கிறது. கோழி ஏற்­று­ம­திக்கு மலே­சியா விதித்­துள்ள தடை­யால் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள 11 கோழி அறுப்பு நிலையங்களிடமிருந்து ஒரு மாதத்­துக்­கான வெளி­நாட்டு ஊழி­யர் தீர்வை வசூ­லிக்­கப்­ப­டாது.

உண­வுச் சேவை­கள், உணவு உற்­பத்தி, சில்­லறை வர்த்­த­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த சிறிய மற்­றும் நடுத்­தர உள்­ளூர் நிறு­

வ­னங்­க­ளுக்குப் புதிய எரி­சக்­தித் திறன் மானி­யம் வழங்­கப்­படும்.

குறைந்த அள­வி­லான எரி­சக்தி ­யைப் பயன்­ப­டுத்­தும் சாத­னங்­

க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் அதி­

க­ரிக்­கும் எரி­சக்தி கட்­ட­ணங்­

க­ளால் ஏற்­படும் செல­வு­க­ளைக் குறைக்­க­வும் 70 விழுக்­காடு வரை ஆத­ரவு வழங்­கப்­படும்.

இந்­த ஆதரவு தொகுப்­புத் திட்­டத்­துக்­காக அர­சாங்க கையிருப்பு நிதியில் இருந்து நிதி எடுக்­கப்­

ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்­டில் எதிர்­பார்த்த அள­வை­விட பொரு­ளி­யல் மீட்சி அதி­க­மாக இருந்­த­தால் கடந்த நிதி ஆண்­டில் அர­சாங்­கத்­துக்­குக் கூடு­தல் வரு­வாய் கிடைத்­த­தும் இதற்­குக் கார­ணம் என்று நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு வோங் கூறி­னார்.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வலை எதிர்­கொள்­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்ட தொகையை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தும் நிலை ஏற்­ப­ட­வில்லை. ஓமிக்­ரான் கிருமி வகை எதிர்­பார்த்த அள­வுக்­குக் கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தா­ததே இதற்­குக் கார­ணம். எனவே, தற்­போ­தைய நில­வ­ரப்­படி கூடு­தல் தொகை ஒதுக்­கப்­ப­டாது," என்று திரு வோங் தெரி­வித்­தார்.

இன்­னும் சில காலத்­துக்குப் பண­வீக்­கம் தொடர்ந்து அதி­க­மாக இருக்­கும் என்­ப­தை­யும் அது சீர­டை­வ­தற்கு முன்பு கூடு­தல் ஏற்­றம் காணக்­கூ­டும் என்­ப­தை­யும் சிங்­கப்­பூ­ரர்­கள் புரிந்­து­கொண்டு அதற்­குத் தயா­ராக வேண்­டும் என்­றார் அவர்.

பண­வீக்­கத்­தால் குறைந்த வரு­மான குடும்­பங்களைச் சேர்ந்தோரும் எளி­தில் பாதிப்­

ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­னரும் அதி­கம் பாதிப்படைவர் என்­ப­தால் அதை எதிர்­கொள்ள காம்­கேர் சமூக நலத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் குறு­கிய கால, நடுத்­தர கால உத­வித் திட்­ட­மும் நீண்­ட­கால உத­வித் திட்­ட­மும் நிரந்­த­ர­மாக மேம்­ப­டுத்­தப்­படும்.

இதன்­மூ­லம் நீண்­ட­கால

உத­வித்­திட்­டம் பெறும் ஓர் உறுப்­பி­னர் கொண்ட குடும்­பத்­துக்கு மாதந்­தோ­றும் $640 வழங்­கப்­படும். தற்­போது $600 மட்­டுமே வழங்­கப்­ப­டு­கிறது.

குறைந்த அள­வி­லான ஓய்­வூதி­ யத்­தைப் பெறு­ப­வர்­க­ளுக்­கான படித்­தொகை, மாதாந்­திர ஓய்­வூ­திய வரம்பு தலா $30 உயர்த்­தப்­படும். படித்­தொகை $350ஆக­வும் மாதாந்­திர ஓய்­வூ­தி­யம் $1,280ஆக­வும் உயர்த்­தப்­படும்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­

க­ளுக்­காகப் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ளத் திட்­டத்தை அர­சாங்­கம் மேம்­ப­டுத்­தும். தகு­தி­பெ­றும் சம்­பள உயர்­வு­க­ளுக்­குத் தேவை­யான நிதி­யில் 75 விழுக்­காட்­டுத் தொகையை அர­சாங்­கம் வழங்­கும். மொத்த மாதச் சம்­ப­ள­மாக $2,500 வரை ஈட்­டும் சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்கு இத்­திட்­டம் பொருந்­தும்.

மாதந்­தோ­றும் $2,500க்கு அதிகமாகவும் $3,000 வரையிலும் ஈட்­டும் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்­வுத் தொகை­யில் 45 விழுக்­காட்டை அர­சாங்­கம் தரும்.

குறைந்­தது ஆறு மாதங்­

க­ளுக்கு வேலை இல்­லா­மல் தவிக்­கும் மூத்­தோ­ரை­யும் உடற்­கு­றை­உள்­ளோர் மற்­றும் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து விடு­த­லை­யா­ன­வர்­க­ளை­யும் வேலை­யில் அமர்த்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கும் வேலை வளர்ச்சி ஊக்­கத்­தொ­கைத் திட்­டம் மேலும் ஆறு மாதங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­படும்.

இத்­திட்­டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடப்­பில் இருக்­கும் என்று திரு வோங் தெரி­வித்­தார்.

உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கும் நிறு­வ­ன நிதித் திட்­டம்-வர்த்­த­கக் கட­னும் மேம்­

ப­டுத்­தப்­படும். அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை வழங்­கப்­படும் அதி­க­பட்ச கடன் தொகை $5 மில்­லி­ய­னி­

லி­ருந்து $10 மில்­லி­ய­னுக்கு உயர்த்­தப்­படும். வர்த்­த­கங்­க­ளுக்­குத் தேவை­யான மூல­த­னம் தேவைப்­படும் நிறு­வ­னங்­கள் இப்­போ­தி­லி­ருந்து செப்­டம்­பர் இறுதி வரை தற்­கா­லிக கடன் இணைப்­புத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்­தத் திட்­டம் காலா­வ­தி­யா­ன­தும் தொழில்­நி­று­வன நிதி ஆத­ர­வுத் திட்­டத்­தின் நடை­முறை மூல­

த­னக் கடன் மேம்­ப­டுத்­தப்­படும். அக்­டோ­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அதி­க­பட்ச கடன் தொகை $300,000லிருந்து $500,000க்கு ஏற்­றம் காணும். அதி­க­ரிக்­கும் விலை­வாசி குறித்து சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் கவ­லைப்­ப­டு­வது

தமக்­குத் தெரி­யும் என்று திரு வோங் கூறி­னார்.

"பண­வீக்­கத்­து­டன் சேர்த்து வேறு பல சவால்­க­ளை­யும் நாம் எதிர்­கொள்ள வேண்டி இருக்­கிறது என்­பதை தய­வு­செய்து புரிந்­து­கொள்­ளுங்­கள். அதி­க­­ரிக்­கும் வெப்­ப­நிலை, பரு­வ­நிலை மாற்­றம், நாடு­க­ளுக்கு இடை­

யி­லான போட்­டித்­தன்மை மற்­றும் பதற்­ற­நிலை ஆகிய சவால்­கள் உள்­ளன. அது­மட்­டு­மல்­லாது, உலக நாடு­க­ளி­டை­யி­லான பிளவு மோச­ம­டை­கிறது.

எனவே, புதிய உல­கச் சூழ­லுக்கு ஏற்ப நம்மை மறு­சீ­ர­மைத்­துக்­கொண்டு மாற்­றிக்­கொள்ள வேண்­டும்," என்று திரு வோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!