'ஜிஎஸ்டி அதிகரிப்பு திட்டமிட்டபடி நடக்கும்'

'ஜிஎஸ்டி அதிகரிப்பு திட்டமிட்டபடி நடக்கும்'

2 mins read

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அதி­க­ரிப்பு திட்­ட­மிட்­ட­படி நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

விலை­வாசி அதி­க­ரித்து வரு­வ­தால் ஜிஎஸ்டி அதி­க­ரிப்பு ஒத்­தி­வைக்­கப்­ப­டுமா என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அவர் இவ்­வாறு பதி­ல் அளித்­தார்.

உய­ரும் பண­வீக்­கம், அதி­க­ரிக்­கும் விலை­வாசி ஆகி­ய­வற்­றால் ஏற்­படும் சவால்­களை ஜிஎஸ்டி அதி­க­ரிப்பு மேலும் கடு­மை­யாக்­கும் என்ற கவலை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இருப்­பது தமக்­குத் தெரி­யும் என்­றார் திரு வோங். ஆனால் ஜிஎஸ்டி அதி­க­ரிப்பு அவசியம் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஜிஎஸ்டி அதி­க­ரிப்பு இரண்டு கட்­டங்­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்­த­போது நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் தெரி­வித்­தி­ருந்­தார்.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் தேதி­யன்று ஜிஎஸ்டி 7 விழுக்­காட்­டி­லி­ருந்து 8 விழுக்­கா­டாக உயர்த்­தப்­படும். 2024ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் தேதி­யன்று அது 8 விழுக்­காட்­டி­லி­ருந்து 9 விழுக்­கா­டாக உயர்த்­தப்­படும்.

"செல­வி­னங்­கள் வெகு விரை­வாக அதி­க­ரித்து வரு­கின்­றன. மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புச் செல­வு­கள் இதற்கு முக்­கிய கார­ணங்­கள். அர­சாங்க வரு­வாயை உயர்த்த பல சாத்­தி­யக்­கூ­று­களை ஆராய்ந்­துள்­ளோம். வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தி­லும் பல்­வேறு மாற்­றங்­க­ளைச் செய்­தோம். வரு­மான வரி, சொத்து வரி, சொகுசு கார் வரி ஆகி­யவை இதில் அடங்­கும். ஆனா­லும் வரு­வாயை உயர்த்த இவை போது­மா­ன­தாக இல்லை. எனவே, ஜிஎஸ்­டியை அதி­க­ரிக்­கும் அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது," என்­றார் திரு வோங்.

நிலை­யற்­ற­தன்மை, சவால்­மிக்க பொரு­ளி­யல் சூழல் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்­கொண்டு ஜிஎஸ்டி அதி

­க­ரிப்பை முடிந்­த­வரை ஒத்­தி­வைக்க வும் இரண்டு கட்­டங்­க­ளாக அதை அதி­க­ரிக்­க­வும் முடி­வெ­டுத்­த­தாக திரு வோங் தெரி­வித்­தார்.