இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

2 mins read

இலங்கை அதி­ப­ரின் அதி­கா­ரத்­தைக் குறைக்க அந்­நாட்டு அமைச்­

ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இது­தொ­டர்­பான அர­ச­மைப்­புச் சட்­டத் திருத்­தங்­க­ளுக்கு இலங்கை அமைச்­சர்­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.

மிகக் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­

பட்­டுள்ள இலங்­கை­யில், அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி விலக வேண்­டும் எனக் கூறி கடந்த சில மாதங்­க­ளாக அந்­நாட்டு மக்­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

சட்­டத் திருத்­தம் அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்கு ஏற்­பு­டை­ய­து­தானா என்­பதை ஆராய அது நாட்­டின் தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு அனுப்­பி­வைக்­கப்­படும் என்று செய்தி ­யா­ளர்­க­ளி­டம் இலங்கை அமைச்­ச­ர­வை­யின் செய்­தித் தொடர்­பா­ளர் பன்­டுலா குண­வர்த்­தன நேற்று தெரி­வித்­தார்.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி விலக வேண்­டும் என நாளுக்கு நாள் குரல்­கள் வலுக்­கின்­ற நிலை­யில், தம்­மீ­தும் தமது குடும்­பத்­தார் மீதும் மக்­க­ளுக்கு இருக்­கும் கோபத்­தைத் தணிக்­கும் முயற்­சி­யில் அவர் இறங்­கி­யுள்­ளார்.

இதன் கார­ண­மாக அர­ச­மைப்­­புச் சட்­டத் திருத்­தங்­க­ளுக்கு அவர் இணங்­கி­யுள்­ளார்.

2019ஆம் ஆண்­டில் திரு கோத்­த­பாய ராஜ­பக்சே அதி­பர் பதவி ஏற்ற பிறகு தமக்கு அதிக அதி­கா­ரம் கொடுக்­கும் நோக்­கு­டன் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் பல திருத்­தங்­க­ளைக் கொண்டு வந்­தார்.

திரு ராஜ­பக்­சேக்கு அசுர பலம் கொடுத்த அந்­தத் திருத்­தங்­களை தற்­போது மேற்­கொள்­ளப்­படும்

முயற்­சி­கள் எந்த அள­வுக்­குப் பலவீனத்தைத் தரும் என்ற கேள்வி யை இலங்கை வழக்­க­றி­ஞர்

சங்­கம் எழுப்­பி­யுள்­ளது.

இந்த ஆக அண்­மைய சட்­டத் திருத்­தங்­க­ளைச் சட்­ட­மாக்க மூன்­றில் இரண்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அவற்றை ஆத­ரித்து வாக்­க­ளிக்க வேண்­டும்.

இது­கு­றித்து திரு குண­வர்த்­தன தக­வல் ஏதும் வெளி­யி­ட­வில்லை. ஆனால் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­கள் சட்­ட­மாக்­கப்­பட்­டால் நாடாளுமன்­றத்­துக்­குக் கூடு­தல் அதி­கா­ரம் கிடைக்­கும் என அவர் கூறி­னார்.

"ஆக அண்­மைய சட்­டத் திருத்­தங்­கள் ஆட்சி முறையை மேம்­

ப­டுத்­தும். இதுவே அனைத்­து­லக பண நிதி­ய­மும் கடன் வழங்­கும் மற்ற அமைப்­பு­களும் முன்­வைத்­துள்ள நிபந்­த­னை­கள்," என்று திரு குண­வர்த்­தன கூறி­னார்.