மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ள பிரிட்டிஷ் ரயில் சேவை ஊழியர்கள்

மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ள பிரிட்டிஷ் ரயில் சேவை ஊழியர்கள்

2 mins read
7c15f7ec-fbbf-4aec-af52-471049c594d4
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வெறிச்சோடி கிடக்கும் பிரிட்டிஷ் ரயில் நிலையங்கள். படம்: இபிஏ -

ஏறத்­தாழ 30 ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் மிகப் பெரிய வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் பிரிட்­டிஷ் ரயில் சேவை ஊழி­யர்­கள் இறங்கி உள்­ள­னர்.

அதி­க­ரிக்­கும் பண­வீக்­கம் கார­ண­மாக பிரிட்­ட­னில் விலை­வாசி கட்­டுக்­க­டங்­கா­மல் அதிகரித்­து

உள்­ளது. கடந்த 40 ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் பிரிட்­ட­னில் பண­வீக்­கம் புதிய உச்­சத்தை எட்டி­ உள்­ளது. வேலை நிறுத்­தப் போராட்­டத்­தைத் தவிர்க்க நேற்று பிற்­ப­கல் நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை

தோல்­வி­யில் முடிந்­தது.

இதை­ய­டுத்து, 50,000க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் மூன்று நாள் வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

பண­வீக்­கத்­தைக் கருத்­தில் கொள்­ளா­மல் ஊழி­யர்­க­ளுக்கு

மிக­வும் குறைந்த அள­வில்

சம்­பள உயர்வு வழங்­கு­வது

ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்று என்று பிரிட்­ட­னின் ஆர்­எம்டி தொழிற்­சங்க தலை­மைச் செய­

லா­ளர் மிக் லிஞ்ச் அதி­ருப்தி தெரி­வித்­தார்.

பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­யில் பெரு­ம­ள­வி­லான இடை­யூ­றைத் தவிர்க்க பிரிட்­டிஷ் அர­சாங்­கம் தன்­னால் முடிந்த அனைத்­தை­யும் செய்து வரு­வ­தாக பிரிட்­டிஷ் போக்கு­வ­ரத்து அமைச்­சர் கிரான்ட்ஸ் ஷேப்ஸ் கூறி­னார். திட்­ட­மிட்ட சேவை­களில் கிட்­டத்­தட்ட 20 விழுக்­காடு சேவை­கள் தொட­ரும் என்று அவர் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அத்­தி­யா­வ­சி­யச் சேவை ஊழி­யர்­க­ளை­யும் முக்­கிய போக்குவரத்­துப் பாதை­க­ளை­யும் கருத்­தில் கொண்டு இச்­சே­வை­கள் வழங்­கப்­படும் என்­றார் அவர்.

வேலை நிறுத்­தப் போராட்­டம் கார­ண­மாக கிளாஸ்­டன்­பரி இசை விழா போன்ற முக்­கிய

நிகழ்ச்­சி­கள் தடை­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

வேலை நிறுத்­தப் போராட்­டம் கார­ண­மா­கப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள் தடை­படும் என்­ப­தால் தேசிய தேர்வு எழுத இருக்­கும் ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர் என்று பள்­ளி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, ஊழி­யர்­க­ளுக்கு உதவி செய்­வ­தற்­குப் பதி­லாக தொழிற்­சங்­கங்­கள் அவர்­க­ளுக்­குத் தீங்கு விளை­விப்­ப­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் குறை­கூ­றி­யுள்­ளார். இந்த வேலை நிறுத்­தப் போராட்­டம், ரயில் சேவை ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் கிடைக்க கார­ண­மாக இருக்­கும் பய­ணி­க­ளுக்கு­அசௌகரியத்தைத் தருவதாக வும் வர்த்­த­கங்­களை முடக்கு

வதாகவும் அவர் சாடினார்.