மலேசிய துணை மாமன்னர் சிங்கப்பூர் வருகை

மலேசிய துணை மாமன்னர் சிங்கப்பூர் வருகை

1 mins read
e35d8233-1921-46fa-99f3-cf8f2a8801d4
(இடமிருந்து) வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மலேசிய துணை மாமன்னர் நஸ்ரின் ஷா, பிரதமர் லீ சியன் லூங், டான் ஸ்ரீ முகம்மது அன்வார் சைனி ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். படம்: லீ சியன் லூங்/ ஃபேஸ்புக் -

மலேசியாவின் துணை மாமன்னரும் பேரா சுல்தானுமான சுல்தான் நஸ்ரின் ஷா, பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்திருக்கிறார். நாளை வரை இங்கு இருக்கும் அவர் சிங்கப்பூர் தலைவர்களை சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

சுல்தான் நஸ்ரின், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பேரா இஸ்லாமிய சமய, மலாய் பாரம்பரிய மன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகம்மது அன்வார் சைனி ஆகியோருடன் பிரதமர் திரு லீ உரையாடினார்.

அந்த உரையாடலைக் காட்டும் படத்தை நேற்று ஃபேஸ்புக்கில் திரு லீ பதிவிட்டார்.