உதவி தேவைப்படுகின்ற சிறாருக்கு சிறப்பு ஆதரவு

உதவி தேவைப்படுகின்ற சிறாருக்கு சிறப்பு ஆதரவு

3 mins read

பாலர்பள்ளிகளில் மூன்று ஆண்டுகளில் மேலும் இடங்கள் கிடைக்கும்

வள­ரும் பரு­வத்­தில் உதவி தேவைப்­படக்­கூ­டிய சிறார்­க­ளுக்கு சிறப்பு ஆத­ரவு தரும் ஒரு செயல்­திட்­டம் நடப்­புக்கு வந்து இருக்­கிறது. அந்­தத் திட்­டம் பாலர்­பள்ளி­களில் அத்­த­கைய சிறார்­க­ளுக்கு அதிக இடங்­களை ஒதுக்கித் தரும்.

'எல்­லா­ருக்­கு­மான ஆத­ர­வுச் செயல்­திட்­டம்' என்று அழைக்­கப்­படும் அந்­தத் திட்­டம் 2021ல் தொடங்­கப்­பட்­டது.

அதன்­கீழ் அடுத்த மூன்­றாண்­டு­களில் பாலர்­பள்­ளி­களில் 100 இடங்­கள் உரு­வாக்­கப்­படும். சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சுவெ­லிங் நேற்று இந்த விவ­ரங்­களை அறி­வித்­தார்.

இளம்­ப­ருவ மேம்­பாட்டு முகவை அமைப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தும் அந்­தச் செயல் திட்­டத்­தின் கீழ் இப்­போது ஏழு பாலர்­பள்­ளி­களில் 38 சிறார்­கள் சேர்க்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

புதிய செயல்­திட்­டம் மூன்று முதல் ஆறு வரை வய­துள்ள உடல் வளர்ச்சி உதவி தேவைப்­படும் சிறா­ருக்கு உத­வு­கிறது.

பாலர்­பள்ளி சூழ­லில் அத்­த­கைய சிறார்­க­ளுக்­குத் தேவைப்­படும் உத­வி­களும் ஆத­ர­வு­ம் பாலர்­பள்ளி கல்வி­யு­டன் சேர்த்து முன்­ன­தா­கவே கிடைக்க அந்­தச் செயல்­திட்­டம் வகை செய்­கிறது.

அமைச்­சர் திரு­வாட்டி சுன், நேற்று உட்­லண்ட்­சில் இருக்­கும் புளோக்­ 406ல் அமைந்­துள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிலை­யத்­துக்கு வரு­கை­ய­ளித்­தார்.

இந்­தப் பள்ளி எல்­லா­ருக்­கு­மான ஆதரவுச் செயல்­திட்­டத்தின்கீழ் வரும் பள்­ளி­களில் ஒன்­றா­கும். இந்தப் பள்ளியில், உதவி தேவைப்­படும் மாண­வர்­க­ளுக்­குத் தோதாக உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் மாற்றப்பட்டுள்ளன.

இதர மாண­வர்­க­ளு­டன் சேர்ந்து உதவி தேவைப்­படும் மாண­வர்­களும் கல்வி கற்று மேம்­பட உத­வும் வகை­யில் மேசை, நாற்­கா­லி­கள் போன்ற பல­வும் பொருத்­த­மாக வடி­வ­மைக்­கப்­பட்டு இடம்­பெ­று­கின்­றன என்­பதை அமைச்­சர் சுட்டிக்­காட்­டி­னார்.

அத்­த­கைய சிறார்­கள் படிப்­ப­டி­யாக ஒவ்­வொன்­றை­யும் செம்­மை­யான முறை­யில் கற்­றுக்­கொள்­ளும் வகை­யில் ஆசிரி­யர்­கள் பல கல்விச் சாத­னங்­க­ளை­யும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளை­யும் பின்­பற்று­கிறார்­கள் என்று திரு­வாட்டி சுன் தெரி­வித்­தார். மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர்­பள்­ளியை என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கேம்­பஸ் அமைப்பு நிர்­வ­கித்து நடத்­து­கிறது.

விரை­வாக பேச வராத, மற்­ற­வ­ரு­டன் கலந்து பழகத் தெரி­யாத குறை­பா­டு­களுடன் கூடிய சிறார்­க­ளுக்குப் பொருத்­த­மான ஏற்­பா­டு­க­ளு­டன் அந்­தப் பள்­ளி­யில் பல திருத்­தங்­கள் செய்­யப்­பட்டு உள்­ளன.

ஒரு குறிப்­பிட்ட வளர்ச்சிப் பரு­வத்தை எட்­டு­வ­தற்கு வழக்­க­மான காலத்­தை­விட அதிக காலம் பிடிக்­கக்­கூ­டிய குறை­பாடுள்ள சிறார்­க­ளுக்­கும் அந்­தப் பள்ளி உத­வு­கிறது.

இத­னி­டையே, இது பற்றி கருத்து கூறிய 'என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கேம்­பஸ்' அமைப்­பின் சிறார் ஆத­ரவு சேவை­கள் துறை மூத்த நிர்­வாகி திரு­வாட்டி டேனிஸ் பிதியா, இந்த அமைப்­பின் இரண்டு நிலை­யங்­களில் கூரை­கள் தாழ்ந்த நிலை­யில் அமைக்­கப்­பட்டுள்ளதாகவும் இதன்­மூ­லம் வகுப்­ப­றை­யில் இரைச்­சல் குறைக்­கப்­பட்டு உள்­ளதாகவும் கூறினார்.

ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளு­டைய வகுப்பை சிறந்த முறை­யில் நிர்­வ­கிக்க இது உதவு­கிறது என்று அவர் விளக்­கினார்.

இத­னி­டையே, ஆறு வய­து வரையுள்ள உடல் வளர்ச்சி உதவி தேவைப்­ப­டக்­கூடிய சிறார்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் ஊழி­யருக்­கும் பெற்­றோ­ருக்­கும் உத­வும் வகையில் வழி­காட்டி கையேடு ஒன்றை இளம்­ப­ருவ மேம்­பாட்டு முகவை நேற்று வெளி­யிட்­டது.

அந்­தக் கையேட்டை கல்வி அமைச்சு, கேகே மகளிர், சிறார் மருத்­து­வ­மனை உள்­ளிட்ட பல அமைப்­பு­களும் சேர்ந்து உரு­வாக்கி உள்­ளன. எல்­லா­ருக்­குமான பாலர்­பள்ளி பணிக்­குழு என்ற ஓர் அமைப்­பின் பரிந்­து­ரை­யைத் தொடர்ந்து அந்த கையேடு உரு­வாக்­கப்­பட்டு இருக்­கிறது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு 2019ல் அந்­தப் பணிக்­கு­ழுவை அமைத்­தது. பெற்­றோர்­கள் பொது­வாக பல இணை­யத் தளங்­க­ளை­யும் தேடி தங்­கள் பிள்­ளை­க­ளுக்­கான ஆத­ரவு அம்­சங்­கள் பற்றி தெரிந்­து­கொள்­வார்­கள்.

அவர்­க­ளுக்கு இந்­தக் கையேடு பெரி­தும் உத­வும் என்று திரு­வாட்டி சுன் தெரி­வித்­தார்.