அதிமுக: ஓர் உறையில் ஒரு கத்தி; நீயா நானா மோதல் தீவிரம்

தமிழ்­நாட்­டின் மிக பலம் வாய்ந்த எதிர்க்­கட்­சி­யான அதி­மு­க­வுக்கு ஈபி­எஸ், ஓபி­எஸ் இரு­வ­ரில் ஒரு­வர்­தான் தலைமை ஏற்க வேண்­டும் என்ற நெருக்­கு­தல் அதி­க­ரித்­து­விட்ட சூழ்­நி­லை­யில், அந்த இருவரும் நீயா நானா என்று இரண்­டில் ஒன்று பார்க்க களத்­தில் குதித்து இருக்­கி­றார்­கள்.

கட்­சி­யின் பொதுக்குழு, செயற்குழு பர­ப­ரப்­பான சூழ்­நி­லை­யில் இன்று கூட இருந்தது. அதில் ஒற்றைத் தலைமை பற்­றிய தீர்­மானம் தாக்கலாகி எடப்­பாடி பழனிசாமி பொதுச்­செ­ய­லா­ள­ராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்­ள­தாகத் தெரிந்தது.

பழனிசாமி வசம் கட்சி போவதை விரும்பாத ஓ பன்­னீர்செல்­வம் இன்றைய கூட்டத்தை நடக்க விடாமல் செய்ய முயன்று அதில் கலந்­து­கொள்­ளப் போவ­தில்லை என்றும் முன்­ன­தாக அறி­வித்­தார்.

அதி­மு­க­வின் பொதுக்­குழு கூட்டத்தை வான­க­ரத்­தில் நடத்த முடிவுசெய்து பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் 2,640 பேருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்டது.

வேறு யாரும் வரக்கூடாது என்­பதால் கடு­மை­யான கட்­டுப்­பாடு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அனை­வ­ருக்­கும் அழைப்­பி­த­ழும் அடை­யாள அட்­டை­யும் விநி­யோ­கிக்­கப்­பட்டு உள்­ளன. அதில் ஓபிஎஸ், ஈபி­எஸ் இரு­வ­ரின் படங்­களும் இருக்­கின்­றன.

அதி­மு­க­வுக்கு எடப்­பா­டி­யும் பன்னீ­ரும் கூட்­டாக தலை­மைப் பொறுப்பை ஏற்று வரு­கி­றார்­கள்.

ஆனால், ஒரே உறைக்­குள் இரு கத்­தி­கள் இருக்­கக்கூடாது என்று அந்­தக் கட்­சி­யினரே சில கால­மாகவே தெரி­வித்து வந்­தார்­கள். ஒற்­றைத் தலைமை பிரச்­சினை விஸ்­வ­ரூ­பம் எடுத்­து­ள்ளது.

அதி­மு­க­வில் உள்ள நிர்­வாக ரீதி­யி­லான 75 மாவட்­டங்­களில் 68 மாவட்­டச் செய­லா­ளர்­கள் எடப்­பாடிக்கு ஆத­ரவு தெரி­வித்து இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மொத்த பொதுக்­குழு உறுப்­பினர்­களில் 2,300க்கும் மேற்­பட்­ட­வர்­கள் எடப்­பா­டியை ஆத­ரிக்­கி­றார்­கள்.

என்­றா­லும் ஒற்­றைத் தலை மையை பன்­னீர் விரும்­ப­வில்லை. தனக்­குக் கட்­சி­யில் முக்­கிய பொறுப்பு தொடர்ந்து இருந்துவர வேண்­டும் என்­கி­றார் பன்­னீர்.

அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற முன்னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா வின் அணுக்­கத் தோழி­யான சசி­கலா­வுடன் சேர்ந்து செயல்­ப­ட­க்கூட அவர் தயா­ராக இருப்­ப­தா­க­க் கூறப்­பட்டது.

பொதுக்­குழு கூட்­டத்தை ரத்து செய்ய கோரிய மனு நேற்று நீதி­மன்­ற விசாரணைக்கு வந்தது.­

பொதுக்குழுவில் பெரும்பான் மைக்கு ஏற்ப எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படலாம் என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பார் என நீதிமன் றத்தில் அவரின் தரப்பு கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!