போட்டியின்போது மயங்கிய கலைநய நீச்சல் வீராங்கனையைக் காப்பாற்றிய பயிற்றுவிப்பாளர்

ஹங்­கே­ரிய தலை­ந­கர் புடா­பெஸ்ட்­டில் நடை­பெற்ற உலக நீர்­வி­ளை­யாட்டு வெற்றி­யா­ளர் போட்­டி­யில் கலை­ந­யத்­துடன் நீச்­ச­ல­டிக்­கும் வீராங்­கனை அனிதா அல்வாரெஸ் நீச்­சல் குளத்­தில் மயக்­கம் அடைந்­தார். அதைத் தொடர்ந்து, இவ­ரு­டைய பயிற்­று­விப்­பா­ளர் ஆண்ட்ரியா ஃபுவென்டஸ் நீச்­சல் குளத்திற்­குள் உட­ன­டி­யா­கக் குதித்து அல்வாரெஸ் மீட்­டார்.

அமெரிக்க நீச்சல் குழு­வைச் சேர்ந்த அல்வாரெஸ், நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற தனிநபர் இறுதிப் போட்டியை முடித்­த­வு­டன் மயங்­கிய நிலை­யில் நீச்­சல் குளத்­தில் மூழ்­கி­னார். அப்­போது இவர் மூச்­சு­வி­ட­வில்லை.

"எனக்கு அது பேர­திர்ச்­சி­யைத் தந்தது. உயிர்க் காப்­பா­ளர்­கள் உட­ன­டி­யாக காப்­பாற்ற வரா­த­தால் நான் நீச்­சல் குளத்­திற்குள் குதித்­தேன்.

"அவர் மூச்­சு­வி­டா­த­தால் எனக்­குப் பய­மாக இருந்­தது. ஆனால் இப்­போது அவர் நல­மாக உள்­ளார்," என்று ஃபுவென்டஸ் கூறி­னார்.

நீச்­சல் குளத்­தின் அடி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட அல்வாரெஸ், தூக்­குப் படுக்­கை­யில் மருத்­துவ நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

இவர் நல­மாக இருப்­ப­தாக அமெ­ரிக்க நீச்­சல் குழு பின்­னர் அறிக்கை வெளி­யிட்­டது.

ஒலிம்­பிக் போட்­டி­களில் நான்கு முறை பதக்­கம் வென்­றுள்ள ஃபுவென்டஸ், போட்­டி­யின்­போது அல்வாரெஸ் மேற்கொண்ட முயற்­சி­யின் கார­ண­மாக அவர் மயக்­கம் அடைந்­த­தா­கச் சொன்­னார்.

"அவ­ரு­டைய நுரை­யீ­ரல்­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்­தது. அவர் மூச்­சு­வி­டத் தொடங்­கி­ய­வு­டன் அனைத்­தும் சீரா­னது," என்று ஃபுவென்டஸ் கூறி­னார்.

நேற்று ஓய்­வெ­டுத்­துக்­கொண்ட அல்வாரெஸ், கூடு­தல் மருத்­து­வப் பரி­சோ­த­னைக்குப் பிறகு இன்று நடை­பெறும் குழு விளை­யாட்­டில் போட்­டி­யிட விரும்பு­வதாக ஃபுவென்டஸ் சொன்­னார்.

தமது மூன்­றா­வது உலக வெற்­றி­யா­ளர் போட்­டி­யில் 25 வயது அல்வாரெஸ் பங்­கெ­டுத்­தார். ஸ்பெ­யி­னின் பார்­சி­லோனா நக­ரில் கடந்த ஆண்டு நடை­பெற்ற ஒலிம்­பிக் தகு­திச்­சுற்­றுப் போட்டி ஒன்­றி­லும் அவர் மயங்­கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!