உரக்க ஒலித்த ‘ஒற்றைத் தலைமை’ முழக்கம்

ஒற்றைத் தலைமை பற்றி முடிவெடுக்க ஜூலை 11ல் மீண்டும் கூடும் அதிமுக பொதுக்குழு

அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் நேற்று நிறை­வேற்­றப்­பட இருந்த தீர்­மா­னங்­கள் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வதாக­வும் இரட்­டைத் தலை­மையை ரத்து செய்­து­விட்டு, ஒற்­றைத் தலை­மை­யின்­கீழ் தொண்­டாற்­று­வது சம்­பந்­த­மாக விவா­தித்து பதி­வு­செய்ய வேண்­டும் என்ற கோரிக்கை முன்­மொ­ழி­யப்­பட்­ட­தாலும், கூட்­டத்­தி­ல் இ­ருந்து கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் துணை ஒருங்­கி­ணைப்­பாளர்களில் ஒருவரான வைத்தி­லிங்­க­மும் வெளி­ந­டப்பு செய்­த­னர். அப்­போது கூட்­டத்­தில் இருந்த அடை­யா­ளம் தெரி­யாத ஒரு­வர், பன்­னீர்­செல்­வத்தை நோக்கி தண்­ணீர் போத்­தலை வீசி­னார்.

அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நேற்று சென்னை வான­க­ரத்­தில் நடை­பெற்­றது. கூட்­டம் தொடங்­கி­ய­தி­லி­ருந்தே ஒற்­றைத் தலைமை கோரிக்­கையை வலி­யு­றுத்தி குரல்கள் கிளம்பின. மேலும், கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ரா­க­வும் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு ஆத­ர­வா­க­வும் தொண்­டர்­கள் குரல் எழுப்­பி­னர்.

“பொதுக்­கு­ழு­வில் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னங்­களை அனைத்து பொதுக்­குழு உறுப்­பினர்களும் நிரா­க­ரித்­து­விட்­ட­னர். அவர்­கள் முன்­வைக்­கும் ஒரே­யொரு கோரிக்கை, எம்.ஜி.ஆர் மற்­றும் ஜெய­லி­லதா போன்று ஒற்­றைத் தலைமை வர­வேண்­டும் என்­பதே. அந்த ஒற்­றைத் தலைமை தீர்­மானத்­தோடு இணைத்து, அடுத்த கூட்­டத்தை தலைமை எப்­போது கூட்டு­கி­றதோ, அப்­போது அனைத்து தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றப்­படும்,” என்று கட்­சி­யின் துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் கே.பி.முனுசாமி மேடை­யில் கூறி­னார்.

அதன் பிறகு பேசிய அவைத் தலை­வர் தமிழ்­ம­கன் உசேன், ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்­குழு மற்­றும் செயற்­குழு நடை­பெ­றும் என்று அறி­வித்­தார். நேற்று நடந்த அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நிறைவுபெறு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற்ற வான­க­ரத்­தைச் சுற்றி 5 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு சாலை­களில் கடு­மை­யான போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

மேலும் செய்தி - பக்கம் 4ல்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!