‘இலங்கையின் பொருளியல் மீட்சிக்கு இந்தியா உதவும்’

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கித் தவிக்­கும் இலங்­கைக்கு மேலும் உத­வும் வித­மாக இலங்கை அதி­பர், பிர­த­ம­ரு­டன் இந்­தி­யா­வின் மூத்த அர­ச­தந்­திரி ஒரு­வர் நேற்று பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்க அடுத்த ஆறு மாதங்­களில் இலங்­கைக்கு US$5 பில்­லி­யன் தேவைப்­ப­டு­கிறது.

இலங்கை தலை­ந­கர் கொழும்பில் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்­கே­வுடன் இந்­திய வெளி­யு­ற­வுச் செய­லா­ளர் வினய் குவாத்ரா பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். இந்­திய நிதி அமைச்சு அதி­கா­ரி­களும் அவ­ரு­டன் இருந்­த­னர்.

“முத­லீ­டு­களை ஊக்­கு­வித்து, பொரு­ளி­யல் தொடர்­பு­களை வலுப்­படுத்­து­வ­தன் மூலம் இலங்கை பொரு­ளி­யல் மீட்­சிக்கு உதவ இந்தியா தயா­ராக உள்­ளது,” என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் அரிந்­தம் பாக்சி டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

பிர­த­மர் ரணில், மத்­திய வங்கி ஆளு­நர், நிதி அமைச்சு அதி­காரி­கள் ஆகி­யோரை இந்­தி­யப் பேராளர் குழு தனி­யாக சந்­தித்­த­தா­க­வும் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­ ஒரு­வர் கூறி­னார்.

“இலங்­கை­யின் பொரு­ளி­யல் நில­வ­ரம், குறு­கி­ய­கால, நீண்­ட­கால உத­வி­கள் குறித்து மூத்த அதி­கா­ரி­க­ளு­டன் இந்­தி­யப் பேராளர் குழு பேச்­சு­வார்த்தை நடத்­தும்,” என்று இலங்கை வெளி­யு­றவு அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இவ்­வாண்டு இலங்­கைக்கு உதவி அளித்­து­வ­ரும் நாடு­களில் இந்­தியா முதன்மை வகிக்­கிறது. இலங்­கைக்கு இந்­தியா US$4 பில்­லி­யன் (S$5.6 பி.) வழங்­கி­யி­ருப்­பதாக பிர­த­மர் ரணில் நாடா­ளு­மன்­றத்­தில் இந்த வாரம் தெரி­வித்து இருந்­தார்.

இந்­நி­லை­யில், கூடு­தல் ஆத­ரவு வழங்­கு­வது குறித்து இரு நாடு­களும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன. இலங்கை எரி­பொ­ருள் வாங்­க­வும் உரம் இறக்­கு­மதி செய்­ய­வும் US$500 மில்­லி­யன் கட­னு­தவி வழங்கு­வ­தும் இதில் அடங்­கும்.

எரி­பொ­ருள் விநி­யோ­கத்­திற்­காக ரஷ்யா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களி­டம் இலங்கை உதவி கோரி­ உள்­ளது.

இந்­நி­லை­யில், எரி­வாயு வாங்கு­வதற்­காக வரி­சை­யில் காத்­தி­ருந்த 63 வயது ஆட­வர் ஒரு­வர் இறந்து­விட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

அவர் தன் வாக­னங்­க­ளுக்கு டீசல் வாங்க குறைந்­தது ஐந்து நாள்­களாக வரி­சை­யில் காத்­து இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அவர் தம்முடைய கன­ரக வாக­னத்­திற்­குள் இறந்­து­கி­டக்­கக் காணப்­பட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!