பெட்டியோடு நிம்மதியையும் தொலைத்த ஆசிரியர்

பெட்டியோடு நிம்மதியையும் தொலைத்த ஆசிரியர்

1 mins read

சிங்கப்பூர் வந்திறங்கியதும் தங்களது பயணப்பெட்டிகளைக் காணாமல் தவித்த பயணிகளில் திருமதி யோகேஸ்வரி சுப்ரமணியமும் ஒருவர். ஆசிரியரான அவர், லண்டனில் பயணத்தைத்த் தொடங்கி, ஆம்ஸ்டெர்டாமில் இணைப்பு விமானத்தைப் பிடித்து சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். ஆனால், லண்டன் விமான நிலையத்தில் அவர் ஒப்படைத்த பயணப்பெட்டிகள் இங்கு வந்து சேரவில்லை. கிட்டத்தட்ட $1,000 மதிப்புள்ள பொருள்கள் அந்தப் பெட்டிகளில் இருந்ததாகவும் ஏறக்குறைய $7,000 மதிப்புள்ள பொருள்களைக் கொண்ட தமது நண்பரின் பயணப்பையும் இங்கு வரவில்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருப்பதாக திருமதி யோகேஸ்வரி கூறினார்.

செய்தி: யுகே‌ஷ் கண்ணன்