விரைவில் கோழி விலையில் புதிய உச்சவரம்பு: மலேசியப் பிரதமர்

கோழி­க­ளின் விலை­யில் மாற்­றம் செய்­யப்­பட்டு புதிய விலை உச்­ச­வ­ரம்பு அறி­விக்­கப்­படும் என்று மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்து உள்­ளார்.

உள்­நாட்­டுச் சந்­தை­யில் ஒரு கிலோ கோழி தற்­போது 8.90 ரிங்­கிட்­டுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது.

ஆனால், கோழி­க­ளுக்­கான தீவ­னத்­தின் விலை பல­ம­டங்கு ஏறி­விட்­ட­தால் இனி­யும் இந்த விலைக்கு கோழி­களை விற்க முடி­யாது என்று கோழிப் பண்ணை முத­லா­ளி­கள் அறி­வித்து இருந்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் சந்தை வியா­பா­ரி­களே விலையை நிர்­ண­யித்­துக் கொள்ள அனு­ம­திக்­கப்­போ­வ­தாக அர­சாங்­கம் சொல்லி இருந்­தது. இந்­நி­லை­யில் திரு இஸ்­மா­யில் நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டார்.

கோழி­க­ளுக்­கான விலை­யில் புதிய உச்­ச­வ­ரம்பை விரை­வில் அர­சாங்­கம் வெளி­யி­டும் என்று அவர் அந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார். உயர்ந்து வரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தால் மக்­க­ளுக்­குக் கோழி விலை­யால் கூடு­தல் சுமை ஏற்­ப­டக்­கூ­டாது என்ற கோணத்­தில் புதிய விலை உச்­ச­வ­ரம்பு பற்றி முடி­வு­எடுக்­கப்பட்­ட­தாக அவர் கூறி­னார்.

புதிய அதி­க­பட்ச விலை என்ன என்­பதை வேளாண், உண­வுத் துறை அமைச்­சர் ரோனல்ட் கியான்டீ அறி­விப்­பார் என்­றும் அவர் கூறி­னார்.

உள்­நாட்­டில் விலையை நிலைப்­ப­டுத்­த­வும் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்­க­வும் கோழி ஏற்­று­ம­திக்கு ஜூன் 1 முதல் மலே­சியா தடை விதித்­தது.

அத­னால், சிங்­கப்­பூ­ரில் கோழி விநி­யோ­கத்­தில் சிர­மம் ஏற்­பட்­டது. அத­னைச் சமா­ளிக்க இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து கோழி­களை இறக்­கு­மதி செய்ய சிங்­கப்­பூர் முயன்று வரு­கிறது.

சில நாள்­க­ளுக்கு முன்­னர் மலே­சியா கோழி ஏற்­று­ம­தித் தடை­யில் சில தளர்­வு­களை அறி­வித்­தது.

கம்­போங் கோழி எனப்­படும் நாட்­டுக் கோழி­க­ளை­யும் கறுப்­புக் கோழி­க­ளை­யும் சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்­து­கொள்­ளத் தடை இல்லை என்று மலே­சியா கூறி­யது. அத­னைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் விற்­ப­னை­யா­ளர்­கள் கம்­போங் கோழி­க­ளை­யும் கறுப்­புக் கோழி­க­ளை­யும் வாங்கி வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!