அமெரிக்காவில் கருக்கலைப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன

அமெரிக்காவில் கருக்கலைப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன

2 mins read
6192cc2b-bdec-4708-abbe-1cfce1f41972
கருக்கலைப்பு எங்கள் உரிமை என்று அமெரிக்க பெண்கள் முழக்கமிடுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்­கா­வில் கருக்­க­லைப்­புக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றம் அளித்­துள்ள தீர்ப்­பால் நாடு முழு­வ­தும் கருக்­க­லைப்பு நிலை­யங்­கள் மூடப்­பட்டு வரு­கின்­றன.

ஏறக்­கு­றைய பாதி மாநி­லங்­களில் கருக்­கலைப்­புக்­குத் தடை விதிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ ப­டு­கிறது. இதை­யொட்டி கருக்­ கலைப்பு நிலை­யங்­க­ளின் கத­வு­கள் மூடப்­ப­டு­கின்­றன.

ஐம்­பது ஆண்­டு­கா­லம் நடப்­பில் இருந்த கருக்­க­லைப்­பு சட்­ட­பூர்வ அனு­ம­தியை வெள்­ளிக்­கி­ழமை உச்ச நீதி­மன்­றம் ரத்து செய்­தது.

அமெ­ரிக்க அதி­பர், உச்ச நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை 'சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள தவறு' என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தத் தீர்ப்பு பெண்­க­ளின் ஆரோக்­கி­யத்­துக்­கும் உயி­ருக்­கும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில் பல மாநி­லங்­களில் உச்ச நீதி­மன்­றத்­தின் தீர்ப்­புக்கு எதி­ராக பெண்­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் குதித்­துள்­ள­னர்.

'எங்­கள் உடல், எங்­கள் வாய்ப்பு', 'கருக்­க­லைப்பு எங்­க­ளு­டைய தனிப்­பட்ட உரிமை', 'நாங்­கள் உங்­க­ளு­டைய அடை­காக்­கும் சாத­ன­மல்ல' போன்ற வாச­கங்­களை அவர்­கள் ஏந்­தி­யி­ருந்­த­னர்.

அரி­சோனா மாநி­லத்­தின் தலை­ந­க­ரான ஃபீனிக்­ஸில் உச்­ச­கட்­ட­மாக அர­சாங்க செனட் கட்­ட­டத்­தின் சன்­னல்­க­ளை­யும் கத­வு­க­ளை­யும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் உடைக்க முயற்சி செய்­த­னர்.

அப்­போது அங்கு வந்த காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்­களை கலைத்­த­னர்.

லாஸ் ஏஞ்­ச­லிஸ் நக­ரில் எதிர்ப்­பா­ளர்­கள் சிலர் நெடுஞ்­சா­லையை மறித்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்­கப்­பட்­டது. நேற்­றும் தொடர்ந்து பெண்­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

இதற்­கி­டையே அர்­கன்­சாஸ் மாநி­லத்­தில் உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ரவு உட­ன­டி­யாக அம­லுக்கு வந்­தது. எந்­த­வொரு சட்­டத்­தை­யும் உடனே அமல்­ப­டுத்­தக்­கூ­டிய சட்­டம் ஏற்­கெ­னவே அங்கு நடப்­பில் இருப்­ப­தால் கருக்­க­லைப்­புத் தடை அமல்­ப­டுத்­தப்­பட்­டது.

லிட்­டில் ராக் நக­ரில் உள்ள ஒரு கருக்­க­லைப்பு நிலை­யத்­தின் ஊழி­யர்­கள், கருக்­க­லைப்­புக்கு பதிவு செய்­தி­ருந்த பெண்­களை அழைத்து முன்­ப­திவு ரத்­துச் செய்­யப்­பட்ட விவ­ரத்­தைத் தெரி­வித்­த­னர்.

"தீயச் செய்தி எந்த நேரத்­தி­லும் தாக்­கும் என்று தயா­ராக இருந்­தோம். ஆனால் தாக்­கும்­போ­து­தான் அதன் கடு­மையை உணர முடி­கிறது. எல்­லாமே தலை­கீ­ழாக மாறி­விட்­டது, வேத­னை­ய­ளிக்­கிறது," என்று அந்த நிலை­யத்­தின் ஊழி­யர் ஒரு­வர் பிபி­சி­யி­டம் தெரி­வித்­தார்.

உச்ச நீதி­மன்­றத்­தின் வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தீர்ப்­பால் அமெ­ரிக்­கா­வில் ஒட்­டு­மொத்­த­மாக 36 மில்­லி­யன் பெண்­கள் தங்­க­ளு­டைய மாநி­லங்­களில் கருக்­க­லைப்பு வாய்ப்பை இழப்­பார்­கள் என்று கருக்­க­லைப்பு சேவை வழங்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­ன­மான 'பிளேன்ட் பேரண்ட்­ஹுட்' மதிப்­பிட்­டுள்­ளது. இதற்­கி­டையே வாஷிங்­ட­னில் உள்ள நீதி­மன்­றத்­திற்கு வெளியே கருக்­க­லைப்பை எதிர்ப்­ப­வர்­களும் தீர்ப்பை கொண்­டாடி மகிழ்ந்­த­னர்.

ஆனால் தீர்ப்புக்கு எதிராக நேற்று அமெரிக்கா முழு வதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.