நார்வேயில் மூன்று மதுபானக் கூடங்களில் துப்பாக்கிச்சூடு; இருவர் பலி; 21 பேர் காயம்

நார்வேயில் மூன்று மதுபானக் கூடங்களில் துப்பாக்கிச்சூடு; இருவர் பலி; 21 பேர் காயம்

1 mins read

ஓஸ்லோ: ஓஸ்லோ நக­ரின் மத்­தி­யில் உள்ள இரவு மது­பா­னக் கூடங்­களில் சனிக்­கி­ழமை நடந்த துப்­பாக்­கிச்சூட்டை பயங்­க­ர­வா­தச் செய­லாக வகைப்­ப­டுத்தி நார்வே காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

இதில் இரண்டு பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 21 பேர் காயம் அடைந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

காயம் அடைந்­த­வர்­களில் பத்து பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது. சம்­பவ இடத்­தி­லி­ருந்து இரண்டு ஆயு­தங்­களை காவல்­ துறை­யி­னர் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

துப்­பாக்­கிச்சூட்­டைத் தொடர்ந்து சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டார். தலை­ந­க­ரின் மத்­தி­யில் மூன்று வெவ்­வேறு இடங்­களில் உள்ள மது­பா­னக் கூடங்­களில் சிங்­கப்­பூர் நேரப்­படி காலை ஏழு மணி­ய­ள­வில் துப்­பாக்­கிச் சூடு நடந்­தது.

இது­வொரு பயங்­க­ர­வா­தச் செய­லாக இருக்­க­லாம் என்று காவல்­துறை அறிக்கை தெரி­வித்­தது.

சந்­தேக நபர், ஈரான் வம்­சா­ வளி­யைச் சேர்ந்த நார்வே குடி­ மகன்.

போதைப் பொருள், கத்தி வைத்திருந்தது போன்று சிறு குற்றச் செயல்களுக்காக அவர் ஏற்கெனவே உள்ளூர் புலனாய்வுத் துறைக்கு அறிமுகமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவத்தில் அவர் மட்டுமே தனியாகச் செயல்பட்டு உள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஓஸ்லோ நகரில் நடைபெறவிருந்த சில முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.