உக்ரேன் நகரில் குண்டு மழை: சமரச முயற்சியில் இந்தோனீசியா

உக்ரேன் நகரில் குண்டு மழை: சமரச முயற்சியில் இந்தோனீசியா

2 mins read

உக்­ரே­னிய தலை­ந­க­ரில் நேற்று அதி­காலை நேரத்­தில் பல இடங்­களில் குண்டு வெடிப்­புச் சத்­தம் கேட்­ட­தாக அந்த நக­ரின் மேயர் விட்­டாலி லிச்­சிகோ டெலி­கி­ராம் குறுஞ்­செய்தி மூலம் தெரி­வித்­தார்.

அந்­தச் சம்­ப­வங்­களில் ஏற்­பட்ட உயி­ரு­டற்சேதம் பற்­றிய உட­னடி தக­வல் எது­வும் தெரி­ய­வில்லை.

மருத்­துவ வண்­டி­களும் மீட்­புப் படை­யி­ன­ரும் சம்­பவ இடத்­துக்கு அனுப்­பப்­பட்­ட­னர். மேலும் பல விவ­ரங்­கள் பின்­னர் தெரி­விக்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

இரண்டு கட்­ட­டங்­களில் இருந்து மக்­கள் வெளி­யேற்­றப்­பட்டு அப்­புறப்­ப­டுத்­தப்படு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­எடுத்து பல மாதங்­கள் ஓடி­விட்­டன. ரஷ்­யா­வுக்கு எதிர்­பார்த்­த­படி வெற்றி கிட்­ட­வில்லை. இருந்­தா­லும் பல நகர்­களை அது தன்­வ­சப்­ப­டுத்தி இருக்­கிறது. இப்­போது அது தலை­நகர் கியவ் மீது தன்­னு­டைய கவ­னத்­தைத் திருப்பி இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

இத­னி­டையே, இன்­னும் சில மாதங்­க­ளுக்­குள் பெலருஸ் நாட்டுக்கு அணு­வாயுத ஏவு­க­ணை­களை ரஷ்யா அனுப்­பும் என்று ரஷ்ய அதி­பர் புட்­டின் சனிக்­கி­ழமை அறி­வித்­தார்.

பெலருஸ் தலை­வர் அலெக்­சாண்­டர் லுகா­ஷென்கோ மாஸ்­கோ­வுக்கு வருகை அளித்­தார். அவரை வர­வேற்று அதி­பர் புட்­டின் உப­சரித்­தார். அப்­போது அவர் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

இவ்­வே­ளை­யில், ஜி7 அமைப்­பில் அங்­கம் வகிக்­கும் ஏழு நாடு­களில் நான்கு நாடு­கள், ரஷ்ய தங்க ஏற்­று­ம­தி­க­ளுக்குத் தடை விதிக்­கப்­போ­வ­தாக அறி­வித்து இருக்­கின்­றன.

மாஸ்­கோ­வுக்கு எதி­ராக பல நாடு­களும் பல்­வேறு தடை­களை விதித்து இருக்­கின்­றன. இந்­தத் தடை­க­ளின் பாதிப்­பு­க­ளைத் தவிர்த்­துக்கொள்­ளும் வகை­யில் பெரும் பணக்­கா­ரர்­கள் தங்­கத்தை வாங்க முயற்சி செய்­வார்­கள்.

இதைத் தடுப்­ப­தற்­காக பிரிட்­டன், கனடா, ஜப்­பான், அமெ­ரிக்கா ஆகிய நான்கு நாடு­கள் ரஷ்ய தங்க ஏற்­று­ம­தி­க­ளுக்குத் தடை விதிக்க முடிவு செய்து இருக்­கின்­றன.

இவ்­வே­ளை­யில், அமைதி முயற்­சியை மேற்­கொண்டு இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ உக்ரேன், ரஷ்ய நாடு­க­ளுக்குப் பயணம் மேற்­கொள்ள இருக்­கி­றார்.

பேச்­சு­வார்த்­தைக்கு கத­வு­களைத் திறந்­து­வி­டும்­படி உக்­ரேன், ரஷ்ய அதி­பர்­களை அப்­போது அவர் கேட்­டுக்­கொள்­வார்.

உட­ன­டி­யாக சண்டை நிறுத்­தத்தை அறி­விக்­கும்­படி ரஷ்ய அதி­பர் புட்­டி­னுக்கு அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

உக்­ரேன் போர் நிறுத்­தப்­பட வேண்­டும். உலக உண­வுப்­பொ­ருள் விநி­யோ­கக் கட்­ட­மைப்பு மறு­ப­டி­யும் சுறு­சு­றுப்பு அடைய வேண்­டும் என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் குறிப்­பிட்­டார்.

ஜி7 உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்து­கொள்ள ஜெர்­மனி புறப்­படு­வ­தற்கு முன்­ன­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் இந்­தக் கருத்­து­க­ளைத் தெரி­வித்­தார்.

உக்­ரே­னில் அமைதி திரும்ப முயற்­சிக்­கும்­படி ஜி7 நாடு­க­ளுக்கு தான் ஊக்­க­மூட்­டப் போவ­தா­க­வும் அதி­பர் குறிப்­பிட்­டார்.