உணவு: முன்னதாக கணித்து இருப்பு வைத்த சிங்கப்பூர்

கொள்முதல் ஏற்பாடுகளைப் பலமுனைப்படுத்தியதாகவும் பிரதமர் லீ விளக்கம்

கொவிட்-19 தலை­தூக்­கி­யது முதலே உண­வுப்­பொ­ருள் கிடைப்­பதில் பிரச்­சினை ஏற்­ப­ட­லாம் என்று சிங்­கப்­பூர் எதிர்­பார்த்து இருந்­தது. அத­னால் அது முன்­ன­தா­கவே போதிய உண­வுப்­பொ­ருள் இருப்பை உறு­திப்­ப­டுத்­தி­யது.

அதோடு மட்­டு­மின்றி, உண­வுப்­பொ­ருள்களைக் கொள்­மு­தல் செய்­வதற்­கான ஏற்­பா­டு­களை சிங்­கப்­பூர் பல­மு­னைப்­ப­டுத்­திய தாகவும் பிரத­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

உண­வுப்­பொ­ருள்­க­ளுக்கு நாடு­கள் ஏற்­று­மதி தடை விதிப்­பது கவலை அளிப்­ப­தாக இருக்­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

உக்­ரேன் போர் கார­ண­மாக உணவு மூலப்­பொ­ருள்­க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­பட்டு இருக்­கிறது. விலை­களும் அதி­க­ரித்து இருக்­கின்­றன.

இவற்­றின் கார­ண­மாக கோழி முத­லா­ன­வற்­றின் உற்­பத்­தி­யில் தாக்­கம் ஏற்­பட்டு இருக்­கிறது என்­பதை பிர­த­மர் சுட்­டினார்.

உண­வுப்­பொ­ருள்­களை இறக்கு­மதி செய்­யும் நாடு என்ற முறை­யில், சிங்­கப்­பூ­ருக்கு இது ஒரு பிரச்­சினை என்­றார் திரு லீ. ஆனால், இப்­ப­டிப்­பட்ட பிரச்­சினை ஏற்­படும் என்­பதை கொவிட்-19 தொற்று தொடங்­கி­யது முதலே சிங்­கப்­பூர் எதிர்­பார்த்து இருந்­தது என்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

கோழி உள்­ளிட்ட இறைச்சி பொருள்­கள், காய்­க­றி­கள், கோதுமை போன்ற தானி­யங்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வது தடை­படலாம் என்று அர­சாங்­கம் அப்­போது கவலை அடைந்தது.

அத­னால் ஏற்­கெ­னவே அதி­களவு இருப்பை சிங்­கப்­பூர் உறு­திப்­ப­டுத்­தி­யது. கொள்­மு­தல் ஏற்­பா­டு­களில் மேலும் பல இடங்­களை உள்­ள­டக்­கும் வகை­யில் அது பல­மு­னைப்­ப­டுத்­தி­யது என்று திரு லீ விளக்­கம் அளித்­தார்.

ருவாண்­டா­வின் தலை­ந­க­ரம் கிகா­லி­யில் காமன்­வெல்த் தலை­வர்­கள் கூட்­டத்­தில் பிர­த­மர் கலந்து­கொண்­டார். அந்­தக் கூட்­டத்­தின் முடி­வில் சனிக்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு லீ பேசி­னார். அப்­போது அவர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தனக்குத் தேவை­யான உண­வுப்­பொ­ருள்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட அள­வுக்கு இறக்­கு­மதி செய்­கிறது.

கொள்­மு­தல் ஏற்­பா­டு­களைப் பல­மு­னைப்­ப­டுத்­து­வதே சிங்­கப்­பூ­ரில் உண­வுப்­பொ­ருள் கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் மிக முக்­கிய உத்­தி­யாக இருக்­கிறது.

இந்­தப் பல­முனை உத்தி கார­ண­மா­கவே இப்­போது பிரேசில் நாட்­டில் இருந்து கோழி­களை சிங்­கப்­பூர் வாங்­கு­கிறது.

உக்­ரேன், போலந்து நாடு­களில் இருந்து முட்­டை­களை அது கொள்­மு­தல் செய்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யில் மோதல் நடப்­ப­தால் பல பிரச்­சி­னை­கள் ஏற்­பட்டு இருப்­ப­தா­க­வும் அத­னால் உண­வுப்­பொருள் ஏற்­று­ம­திக்­குத் தாங்­கள் தடை விதிப்­ப­தா­க­வும் சில நாடு­கள் அண்­மை­யில் அறி­வித்து இருக்­கின்­றன.

எடுத்­துக்­காட்­டாக, சர்க்­கரை ஏற்­று­ம­தியைக் கட்­டுப்­ப­டுத்­து­வதற்­கான திட்­டங்­களை இந்­தியா இந்த மாதம் அறி­வித்­தது. முன்­ன­தாக அது கோதுமை ஏற்­று­மதி கட்டுப்­பாடு முடிவு பற்றி தெரி­வித்து இருந்­தது.

சிங்­கப்­பூ­ருக்­கான கோழி ஏற்று­ ம­தியை ஜூன் 1 முதல் மலே­சியா நிறுத்­தி­யது. இந்­தத் தடை கொஞ்­சம் அகற்­றப்­பட்டுள்ளது.

கோழி, முட்­டை­களை வாங்க கூடு­த­லான இடங்­க­ளைக் கண்டு­பி­டித்­த­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் இப்­போது காய்­க­றி­களை வாங்க புதிய இடங்­க­ளைத் தேடி வரு­கிறது என்றார் பிர­த­மர்.

"இத்­த­கைய செயல்­களை நாம் செய்ய வேண்டி இருக்­கிறது. கொஞ்­ச­கா­ல­மாக நாம் இதை செய்து வரு­கி­றோம்," என திரு லீ தெரி­வித்­தார்.

இந்­தப் பிரச்­சினை தொட­ரும் என்று தான் கரு­து­வ­தாக குறிப்­பிட்ட திரு லீ, இதன்­தொ­டர்­பில் மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்டி இருக்­கும் என்­றார்.

இப்­போது இந்­தப் பிரச்­சினை தொடர்­பில் வர்த்­தக, தொழில் அமைச்சு தீவி­ர­மாக செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறினார்.

அதே­வே­ளை­யில், சூழ்­நிலை யைப் புரிந்­து­கொண்டு மக்கள் நீக்­குப்­போக்­கு­டன் நடந்து­கொள்ள வேண்­டும். பழக்­க­வ­ழக்­கங்­களைக் கொஞ்­சம் மாற்­றிக்­கொண்­டால் இந்­தச் சிர­ம­மான காலத்தைச் சமா­ளித்து மீண்டு வரு­வது மிகவும் எளி­தாக இருக்­கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!