இலங்கை: எரிபொருள் வறட்சி; விலை கூடியது

எரி­பொ­ருள் இல்­லாத நிலையை எட்­டி­விட்ட இலங்கை, கைவ­சம் உள்ள சிறிதளவு டீசல், பெட்­ரோல் விலையை உயர்த்­தியது. ­

அதே­நே­ரத்­தில் இலங்கை பொரு­ளி­யல் நெருக்­க­டியைத் தணிக்­கும் நோக்­கத்­து­டன் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் குழு ஒன்று பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக இலங்கை வந்து சேர்ந்­தது.

இலங்­கை­யில் பொதுப் போக்கு­வரத்து வாக­னங்­களில் டீசல் பயன்­படுத்­தப்­ப­டு­கிறது. டீசல் விலையை 15% அதி­க­ரித்து ஒரு லிட்­டர் விலை ரூ.460 (S$1.78) ஆக சிலோன் பெட்­ரோ­லிய கழ­கம் என்ற அமைப்பு உயர்த்­தி­யது.

அதே­வே­ளை­யில், பெட்­ரோல் விலை 22% கூடி லிட்­டர் ரூ.550 (S$2.12) ஆகி­விட்­டது.

வெளி­நாட்­டில் இருந்து அடுத்­த­தாக எப்­போது எண்­ணெய் வரும் என்­பது நிச்­ச­ய­மா­கத் தெரி­ய­வில்லை என்று எரி­சக்தி அமைச்­சர் காஞ்­சனா விஜி­சே­கரா ஓரிரு நாட்­க­ளுக்கு முன்­பு­தான் கூறினார்.

இதற்­காக அவர் வாகன உரிமை­யா­ளர்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்டு பெட்­ரோல் நிலை­யங்­களில் வரி­சைப்­பி­டிக்க நிற்க வேண்­டாம் என்று அறி­வுரை கூறி­னார்.

எண்­ணெய் வந்­த­தும் நிரப்­பிக் கொள்­ள­லாம் என்று பல­ரும் தங்­கள் வாக­னங்­களை பெட்­ரோல் நிலை­யங்­களில் வரி­சை­யில் நிறுத்தி­விட்டு போய்­விட்­டார்­கள்.

இலங்கை வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சமா­ளிக்­கிறது. கிட்­டத்­தட்ட அந்த நாடு நொடித்­துப் போகும் நிலையை எட்டி­விட்­டது. நாட்­டில் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் நிதி, வெளி­யு­றவு அமைச்­சு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் குழு ஒன்று இலங்கை வந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

இலங்­கைக்கு ஆத­ரவு அளிக்கும் வகை­யில் அமெ­ரிக்கக் குழு வந்­துள்­ள­தாக கொழும்­பில் உள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கம் தெரி­வித்து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!