அமெரிக்கா: காரில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி ஆடவர் சுட்டுக்கொலை

காரில் அமர்ந்­தி­ருந்த இந்­திய வம்­சா­வளி ஆட­வர் ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வம் அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் நிகழ்ந்­தது.

கடந்த சனிக்­கி­ழமை பிற்­ப­கல் 3.45 மணி­ய­ள­வில் சத்­னம் சிங், 31, என்ற அந்த ஆட­வர், கார் நிறுத்­து­மி­டம் ஒன்­றில் தமது காரை நிறுத்­தி­விட்டு, அத­னுள் அமர்ந்து இ­ருந்­தார். அப்­போது துப்­பாக்­கி­யு­டன் வந்த ஒரு­வன் அவ­ரைச் சுட்­டு­விட்­டுத் தப்­பி­விட்­டான்.

திரு சத்­னம் வசித்த தெரு­விலேயே இச்சம்­ப­வம் நிகழ்ந்­தது.

நெஞ்­சி­லும் கழுத்­தி­லும் குண்டு­ பாய்ந்த நிலை­யில், அரு­கி­லுள்ள ஒரு மருத்­து­வ­ம­னைக்கு திரு சத்னம் கொண்­டு­செல்­லப்­பட்­டார். ஆனால், அவர் ஏற்­கெ­னவே இறந்து­விட்­ட­தா­கக் கூறி, மருத்­து­வர்­கள் கைவி­ரித்­த­னர்.

சம்­ப­வம் நிகழ்­வ­தற்­குச் சற்று நேரத்­திற்கு முன்­பு­தான் தம் நண்­பர் ஒரு­வ­ரி­டம் இருந்து திரு சத்­னம் காரைக் கட­னா­கப் பெற்­று­வந்­த­தா­க­வும் அவர் யாரையோ ஏற்­றிச் செல்­லக் காத்­தி­ருந்­த­தா­க­வும் தெரி­கிறது என்று காவல்­துறை தெரி­வித்­தது.

துப்­பாக்­கி­யு­டன் வந்­த­வன், திரு சிங்­கைக் கொல்ல வந்­தானா அல்­லது அந்த காரின் உரி­மை­யா­ள­ரைக் கொல்ல வந்­தானா என்­பது தெரி­ய­வில்லை என்­றும் காவல்­துறை அறிக்கை கூறி­யது.

இந்­தக் கொலைச் சம்­ப­வம் தொடர்­பில் இன்­னும் எவ­ரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை.

மாண்ட திரு சிங் அன்­பா­ன­வர், அமை­தி­யா­ன­வர் என்று அவரது அண்டை வீட்­டுக்­கா­ர­ரான கிறிஸ்­டினா பெர்­சாத் என்­ப­வர் கூறி­ய­தாக 'நியூ­யார்க் டெய்லி நியூஸ்' செய்தி தெரி­வித்­தது.

ஒரு வாரத்­திற்கு முன்­னர் இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லத்­தைச் சேர்ந்த சாய் சரண் என்ற 25 வயது இளை­யர், பால்­டி­மோர் நக­ரில் தமது காரில் வைத்­துச் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!