டிபிஎஸ் வீட்டுக் கடன் வட்டி விகிதம் உயர்கிறது

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய கடன் வழங்­கும் வங்­கி­யான டிபி­எஸ், அதன் அனைத்து வீட்­டுக் கடன் தொகுப்­பு­க­ளுக்­கான வட்டி விகி­தத்தையும் உயர்த்­தி­யி­ருக்­கிறது. இது நேற்று முன்­தி­னம் இரவு முதல் நடப்­புக்கு வந்­துள்­ள­தாக வங்கி தெரி­வித்­துள்­ளது.

அது மட்­டு­மல்­லா­மல், ஐந்து ஆண்­டு­கா­லத்­திற்கு நிலை­யான வட்டி விகி­தத்­தைக் கொண்ட வீட்­டுக் கடன் தொகுப்­பை­யும் அது ரத்து செய்­துள்­ளது. முன்­ன­தாக இந்த வட்டி விகி­தம் 2.05 விழுக்­கா­டாக இருந்­தது.

டிபி­எஸ் வங்­கி­யின் வீட்­டுக் கடன் வட்டி விகி­தத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு ஆராய்ந்­த­போது இந்த விவ­ரம் தெரியவந்­துள்­ளது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யால் வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட்­டது. இத­னைக் கவ­னத்­தில் கொண்ட சிங்­கப்­பூ­ரின் 'யுஓபி', 'ஓசி­பிசி' வங்­கி­கள் இரண்­டும் தங்­க­ளின் வீட்­டுக் கடன் தொகுப்­பு­க­ளின் வட்டி விகி­தத்­தைக் கடந்த வாரம் உயர்த்­தின. அடுத்­த­ப­டி­யாக டிபி­எஸ் வங்­கி­யும் அதே வழி­யில் அதன் வீட்­டுக் கடன் வட்டி விகி­தத்தை கூட்­டி­யுள்­ளது.

ஈராண்டு கால நிலை­யான வட்டி விகி­தத்தை யுஓபி, ஓசி­பிசி வங்­கி­கள், ஆண்­டுக்கு 2.65 விழுக்­கா­டாக உயர்த்­தின.

இதற்­கி­டையே, ஆண்­டுக்கு 2.75 விழுக்­காடு என்ற டிபி­எஸ்­ஸின் தற்­போ­தைய நிலை­யான வட்டி விகி­தமே இதர மூன்று உள்­ளூர் வங்­கி­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது அதி­க­மா­கும்.

டிபி­எஸ்­ஸின் இரண்டு ஆண்­டுக்­கான நிலை­யான வட்டி விகி­தத் தொகுப்பு 0.3 விழுக்­காட்­டுப் புள்­ளி­கள் அதி­கமாகி ஆண்­டுக்கு 2.75 விழுக்­கா­டாக உள்­ளது. மூன்று ஆண்­டுக்­கான நிலை­யான வட்டி விகி­தத் தொகுப்பு தற்­போது 0.15 விழுக்­காட்­டுப் புள்­ளி­கள் கூடி ஆண்­டுக்கு 2.75 விழுக்­கா­டாகும்.

இதன்­படி, வீடு வாங்­கும் ஒரு­வர், இரண்டு ஆண்­டுக்­கான நிலை­யான வட்டி விகி­தத்­தில் 300,000 வெள்ளி கடனை 25 ஆண்­டு­களில் திருப்­பிச் செலுத்­து­தற்­கான கட­னைப் பெற்­றால் மாதந்­தோ­றும் 1,384 வெள்­ளியை வங்­கிக்­குக் கட்ட வேண்­டும். இதற்கு முன்பு 2.45 விழுக்­காடு நிலை­யான வட்டி விகி­தத்­தில் இதே கட­னுக்கு மாதம் செலுத்த வேண்­டிய தவ­ணைத் தொகை $1,338ஆக இருந்­தது. அதா­வது தற்­போது ஒவ்­வொரு மாத­மும் கூடு­த­லாக $46 வெள்ளி செலுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

இதற்குமுன் 2019ஆம் ஆண்­டில் காணப்­பட்ட 2.88 விழுக்­காட்டு உச்­சத்தை மீண்­டும் தொட வாய்ப்­புள்­ள­தைத் தற்­போது சிங்­கப்­பூ­ரின் உய­ரும் வட்டி விகி­தங்­கள் காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, நிலை­யான மற்­றும் ஏற்­ற­இ­றக்­க­மான வட்டி விகி­தங்­க­ளைக் கொண்ட வீட்­டுக் கடன் தொகுப்­புத் திட்­டம் ஒன்று உள்­ள­தாக டிபி­எஸ் வாடிக்­கை­யா­ளர் வங்கி குழு­மத்­தின் வீட்­டுக் கடன் தீர்­வுப் பிரி­வின் தலை­வ­ரான நெல்­சன் நியோ தெரி­வித்­துள்­ளார்.

கடன் தொகை­யில் பாதியை, நிலை­யான வட்டி விகி­தப்­படி பெற்­றுக்­கொள்­வ­தும் மீதித் தொகையை மாறு­படும் சிறப்பு வட்டி விகி­தத்­து­டன் பெற்­றுக்­கொள்­வ­துமே அத்­திட்­டம். ஐம்­பது-ஐம்­பது வட்டி விகி­தத்­தைத் தவிர 40 விழுக்­காடு நிலை­யான வட்­டி­யும் 60 விழுக்­காடு ஏற்­ற­இ­றக்­க­மான வட்­டி­யும் அல்­லது 30 விழுக்­காடு நிலை­யான வட்டி விகி­த­மும் 70 விழுக்­காடு ஏற்ற இறக்­க­மான வட்­டி­யும் கொண்ட வீட்­டுக் கடன் வாய்ப்­பு­களும் உள்­ளன. முழுக் கடன் தொகை­யை­யும் நிலை­யான வட்டி விகி­தத்­தில் கட்டு­வ­தைக் காட்­டி­லும் இவ்வழியில் கடன் தொகை­யைச் செலுத்­து­வது குறை­வாக இருக்­கும் என்­றும் திரு நியோ குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!