அல்லாடும் இலங்கை; குரல் எழுப்பும் கூட்டம்

அல்லாடும் இலங்கை; குரல் எழுப்பும் கூட்டம்

2 mins read
2e14222e-801f-4fa6-9565-530f2c829306
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகைக்கு அருகில் காவல் அதிகாரி ஒருவருடன் வாக்குவாதம் செய்யும் ஆர்ப்பாட்டக் காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

இலங்கை மருத்­து­வர்­கள், இதர மருத்­துவ ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள் எனப் பல­ரும் நேற்று வீதி­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளாக மாறி­னர். ஆக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்­கை­யில் எரி­பொ­ரு­ளுக்­குக் கடும் தட்­டுப்­பாடு நில­வி­வரும் நிலை­யில் இந்த நெருக்­க­டிக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­பதே அவர்­க­ளின் வேண்­டு­கோ­ளாக இருந்­தது.

மின்­சா­ரத் தடை­கள், உண­வுக்­கும் மருந்­துக்­கும் தட்­டுப்­பா­டு ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் ஆர்ப்­பாட்­டங்­கள் வாரக்கணக்­கில் தெருக்­களில் நடந்­து­வ­ரு­கின்­றன. கடந்த மாதம் ஒன்­பது பேர் மாண்­ட­து­டன் சுமார் 300 பேர் காய­மும் அடைந்­ததை அடுத்து இலங்கை பிர­த­ம­ராக இருந்த மகிந்த ராஜ­பக்சே பதவி வில­கி­னார்.

கிட்­டத்­தட்ட ஒரு வாரத்­திற்கு மட்­டுமே போது­மான எரி­பொ­ருள் இருப்­ப­தா­கத் தெரி­வித்த இலங்கை அர­சாங்­கம், இரு வாரங்­க­ளுக்கு ரயில்­கள், பேருந்­து­கள், சுகா­தா­ரப் பிரிவு போன்ற அத்­தி­யா­வ­சி­யச் சேவை­க­ளுக்­கான விநி­யோ­கத்­துக்கு நேற்று முன்­தி­னம் கட்­டுப்­பாடு விதித்­தது.

இதற்­கி­டையே, அத்­தி­யா­வ­சிய சேவை வழங்­கும் ஊழி­யர்­க­ளான மருத்­து­வர்­கள், தாதி­யர், இதர மருத்­துவ ஊழி­யர்­கள் எரி­பொ­ருள் இன்றி தங்­கள் வேலைக்­குச் செல்­லவே அல்­லா­டு­வ­தா­கக் கூறு­கின்­ற­னர்.

"இது சாத்­தி­யப்­ப­டாத ஒரு சூழ்­நிலை. அர­சாங்­கம் இதற்­குத் தீர்வு கண்­டாக வேண்­டும்," என்று செய்தி­யா­ளர்­க­ளிடம் கூறி­னார் இலங்­கை­யின் ஆகப் பெரிய தாதி­யர் தொழிற்­சங்­கத்­தின் செய­லா­ளர் ஹெ.எம்.மெடி­வத்தா.

எரி­பொ­ருள் சாவ­டி­களில் மருத்­துவ ஊழி­யர்­கள் ஒரு குறிப்­பிட்ட டோக்­க­னைக் கொண்டு எரி­பொருளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். ஆனால் அதற்­கும் இப்­போது மதிப்­பில்லை என்று மெடி­வத்தா விளக்­கி­னார்.

"சாவ­டி­யில் இருப்­ப­வர்­கள் எங்­களுக்கு வரி­சை­யில் முன்­னு­ரிமை தரு­வ­தில்லை. எங்­கள் வேலைக்கு நேரத்­து­டன் போக முடி­ய­வில்லை," என்று அவர் கூறி­னார்.

பொதுச் சுகா­தா­ரக் கண்­காணிப்பு அதி­கா­ரி­கள் மற்­றும் இதர சுகா­தா­ரச் சேவை ஊழி­யர்­கள் நேற்­றும் இன்­றும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

கிட்­டத்­தட்ட 22 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட இலங்­கை­யில் அனைத்து இருப்­பு­களும் தீர்ந்­து­வி­டும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த நெருக்­க­டிக்­கி­டையே, படகு வழி­யாக நாட்டை விட்­டுப் போக­வும் பலர் தயா­ரா­கி­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கிறது.