இந்தோனீசியா இங்கு கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் ஒப்புதல்

சிங்கப்பூரில் விரைவில் இந்தோனீசியாவிலிருந்து வரும் கோழி இறைச்சி கிடைக்கவுள்ளது.

சிங்கப்பூர், இந்தோனீசியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவித்துள்ளது.

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அமைப்பு அது குறித்து பதிவிட்டது.

உறைந்த, குளிரூப்பட்ட, சமைத்த கோழி இறைச்சியையும் கோழி இறைச்சி உணவு வகைகளையும் அனுமதிபெற்ற இந்தோனீசிய நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யலாம்.

தற்போது சிங்கப்பூர் நிறுவனங்கள் பிரேசில், தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அத்தகை கோழி இறைச்சியையும் கோழி இறைச்சி உணவுகளையும் இறக்குமதி செய்கின்றன.

பவ்வேறு நாடுகளிலிருந்து உணவைப் பெறுவது சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் முக்கிய அடித்தளம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

உணவு விநியோகத்தில் ஏற்படும் உலகளாவிய குழப்பங்களுக்கு எதிராக இது சிங்கப்பூருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என்றும் அது குறிப்பிட்டது.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற இந்தோனீசிய நிறுவனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.

சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு, விலங்குச் சுகாதார தரத்துக்கு ஏற்ற செய்முறையும் ஆற்றலும் அந்த நிறுவனங்களுக்கு இருப்பதை அது உறுதி செய்யும்.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் நேரடியாக நிறுவனங்களுக்குச் சென்று சோதனை நடத்தி மதிப்பிடுவர்.
கோழிப் பண்கணகளிலும் சோதனைகள் நடத்தப்படும்.

இங்கு வரும் சரக்குகளையும் அமைப்பின் அதிகாரிகள் பரிசோதிப்பார்கள்.

கோழி இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தோனீசியாவைச் சேர்த்துள்ளது, சிங்கப்பூரின் உணவைப் பல்வேறு இடங்களிலிருந்து பெறும் நாட்டின் முயற்சிகளில் இன்னொரு படி என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ கூறினார்.

சிங்கப்பூரின் உணவு வரத்தின் மீள்திறனை இதை மேம்படுத்தும் என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் அண்மையில் இந்தோனீசியா சென்று அங்குள்ள பல இடங்களில் ஆய்வு நடத்தியதையும் திருவாட்டி ஃபூ பகிர்ந்துகொண்டார்.

மலேசியா கடந்த ஜூன் 1ஆம் தேதி கோழி இறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததால் சிங்கப்பூரில் கோழி இறக்குமதி பாதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் அதன் தேவைக்கான மூன்றில் ஒரு பங்கு கோழியை மலேசியாவிடமிருந்து பெறுகிறது.

ஆனால் மலேசியா சில வகைக் கோழிகளின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!